வெறிகொண்ட பாம்பாக படை எடுத்து வரும் ஜீவானந்தம்.. தனக்குத்தானே சூனியம் வைத்த குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது வருகிற எபிசோடை  பார்க்கும் பொழுது பழையபடி ஃபார்முக்கு வந்துவிட்டது போல் களை கட்டுகிறது. அதாவது இனி குணசேகரனை வைத்து டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க முடியாது என்று தெரிந்து விட்டது. அதனால் ரொமான்டிக் மூலம் ரசிகர்களை இழுக்கலாம் என்று சக்தி ஜனனிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் ரொமான்டிக் பார்வையாக பார்ப்பது பேசுவது என்று ரோமியோ ஜூலியட் போல் காதல் ஜோடி பறவையாக பறக்க போகிறார்கள். ஏற்கனவே இதுவரை டம்மியாக இருந்த சக்திக்கு இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக டயலாக் கொடுத்து வருகிறார்கள். அதன் வாயிலாக இனி ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படி சக்தியை ஸ்ட்ராங்காக கொண்டு வரப் போகிறார்கள்.

அத்துடன் இந்த திருவிழாவில் பெரிய சம்பவம் ஒன்னு நடக்கப் போகிறது. அதாவது குணசேகரன் மற்றும் கதிர் பிளான் பண்ணியபடி அப்பத்தாவிற்கும் ஜீவானந்தத்திற்கும் ஏதோ ஒரு வழியில் குடைச்சலை கொடுக்கப் போகிறார்கள். அதே மாதிரி தன் மனைவியைக் கொன்ற குணசேகரன் கதிரையும் காலி பண்ண வேண்டும் என்று வெறி கொண்ட பாம்பாக ஜீவானந்தம் படை எடுத்து வருகிறார்.

Also read: தொடர்ந்து கதையை சொதப்பும் எதிர்நீச்சல் சீரியல்.. மொத்த குறியும் குணசேகரன் மீது வைக்கும் ஜீவானந்தம்

ஆனால் அப்பத்தாவிற்கு எதுவும் ஆகாதபடி நாங்கள் அடைகாப்போம் என்று குணசேகரனுக்கு எதிராக அந்த வீட்டில் உள்ள நான்கு மருமகள் போர்க்கொடி தூக்கி நிற்கிறார்கள். அத்துடன் குணசேகரன் நினைத்தபடி எதுவும் நடக்காது அவரே தோற்கடிக்க போகிறோம் என்று ஜனனி சவால் விடுகிறார். ஆனால் இப்படித்தான் இவர்கள் ஆதிரை திருமணத்தை நடத்தி வைப்போம் என்று சவால் விட்டார்கள்.

ஆனால் கடைசியில் தோற்றுப் போய் நின்று ஆதிரை வாழ்க்கை பாழானது தான் மிச்சம். அதே மாதிரி இதிலும் சொதப்பி விடாமல் குணசேகரனுக்கும் கதிருக்கும் நல்ல பாடத்தை கற்பிக்கும் படி ஜெயித்துக் காட்டினால் மறுபடியும் இந்த நாடகத்தை ரசிகர்கள் தூக்கி கொண்டாடுவது நிச்சயம். அதற்காகவது அந்த வீட்டில் உள்ள மருமகள் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் ஜீவானந்தம் குணசேகரனை கைலாசத்திற்கு அனுப்புவதற்கு எடுத்த முயற்சியில் பழிகாடாக மாட்டப் போவது குணசேகரனின் அம்மா விசாலாட்சி கூட இருக்கலாம். ஏனென்றால் இந்த திருவிழா நிகழ்ச்சியில் ஒரு பெரிய உசுரு போகப் போகிறது என்று ஏற்கனவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி குணசேகரனின் அம்மா கதை முடிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Also read: புது குணசேகரனால் தடுமாறும் சன் டிவியின் டிஆர்பி.. எதிர்நீச்சல் கிடாரியை பலி கொடுக்க நேரம் வந்தாச்சு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்