வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அம்மன் பட நடிகருக்கு கொடுத்த பில்டப் கூட என் படத்துக்கு இல்லையா? செம காண்டில் ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பூமி. இது ஜெயம் ரவியின் 25வது படமும் கூட. அனைவருமே தன்னுடைய 25வது படத்தை தியேட்டரில் தான் வெளியிட ஆசைப்படுவார்கள். ஆனால் ஜெயம் ரவியின் நிலைமை படம் OTTக்கு செல்கிறது.

பிரபல ஹாட் ஸ்டார் நிறுவனம் பூமியை படத்தை வாங்கி வருகின்ற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியிட உள்ளனர். ஆனால் பலருக்கும் ஜெயம்ரவியின் புதிய படம் வெளியாக இருப்பதே தெரியாது என்ற நிலைமைதான். அதற்கு காரணம் பூமி பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பெரிய அளவு ஹாட் ஸ்டார் நிறுவனம் ஆர்வம் காட்டவில்லையாம்.

bhoomi-cinemapettai
bhoomi-cinemapettai

பத்தோடு பதினொன்றாக எடுத்துக் கொண்டார்களாம். இதுவே தியேட்டரில் வெளியாகியிருந்தால் ஜெயம் ரவியின் மார்க்கெட்டே வேறு. ஆனால் ஹாட் ஸ்டாரின் மிக மட்டமான விளம்பர யுக்தியால் ஜெயம் ரவி செம கடுப்பில் உள்ளாராம். அதற்கு காரணம் தீபாவளியை முன்னிட்டு வெளியான மூக்குத்தி அம்மன் படத்திற்கு ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்ததுதானாம்.

ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருந்த அந்த படத்திற்கு கிரிக்கெட் கமெண்டரி பெரிய அளவில் உதவியது. அந்த கமெண்டிரியில் அவர் கிரிக்கெட்டைப் பற்றி பேசியதை விட மூக்குத்தி அம்மன் படத்தை பற்றி பேசியதுதான் அதிகம். இதுவே ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்ட அந்த படத்தை பிளாக்பஸ்டர் ஆக்கிவிட்டனர்.

mookuththi-amman-cinemapettai
mookuththi-amman-cinemapettai

ஆனால் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் பூமி படத்திற்கு மூக்குத்தி அம்மன் படத்தைப் போல 10% கூட புரோமோஷன் செய்யவில்லையாம். இருந்தாலும் கார்ப்பரேட் நிறுவனம் என்பதால் கப்சிப்பென்று இருக்கிறாராம் ஜெயம் ரவி. மார்க்கெட்டே இல்லாத ஆர்ஜே பாலாஜிக்கு அவ்வளவு பெரிய விளம்பரம் செய்த ஹாட்ஸ்டார் நிறுவனம் தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி நடிகராக வலம் வரும் ஜெயம்ரவிக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு என்கிறார்கள் சினிமா வாசிகள்.

சமீபத்தில்கூட பூமி பட விளம்பரத்துக்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி சூப்பராக இருப்பதாக பொய் சொல்ல வேண்டிய நிலைமைக்கு ஜெயம் ரவி தள்ளப் பட்டார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

பேசாம நீங்களும் கிரிக்கெட் பேச போயிருங்க ஜெயம் ரவி!

- Advertisement -

Trending News