ஜெயம் ரவி உடம்பில் இவ்வளவு பிரச்சனைகளா.? மணிரத்னத்தால் வந்த வம்பு

Jayam Ravi-Manirathnam: ஜெயம் ரவிக்கு இந்த வருடம் அமோகமாக இருக்கிறது. சமீபத்தில் இவருடைய இறைவன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக சைரன், பிரதர், ஜீனி உள்ளிட்ட படங்களும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இப்படி அவர் பிசியாக இருந்து வரும் நேரத்தில் உடல்நல பிரச்சனையால் அவர் அவதிபட்டார் என்ற செய்தியும் பகீர் கிளப்பி இருக்கிறது. அதாவது பொன்னியின் செல்வன் வரலாற்று காவியத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்த அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்தது.

Also read: முடியினால் மணிரத்னம் பட வாய்ப்பு இழந்த மாஸ் ஹீரோ.. இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்

ஆனால் அந்த கதாபாத்திரத்திற்காக அவர் ரொம்பவும் மெனக்கெட்டாராம். எப்படி என்றால் ராஜராஜ சோழனாக மாறுவதற்காக அவர் உடல் எடையை கொஞ்சம் அதிகப்படுத்த வேண்டி இருந்திருக்கிறது. அதற்காக அவர் சில ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஜிம்மில் கடுமையான ஒர்க் அவுட்டும் செய்திருக்கிறார்.

அதன் பிறகு தான் படப்பிடிப்பிலேயே அவர் பங்கேற்று இருக்கிறார். கிட்டத்தட்ட மாத கணக்கில் அவர் இந்த உடல் எடையை மெயின்டெயின் செய்து வந்திருக்கிறார். அதனால் அவருக்கு சில பக்க விளைவுகளும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஸ்டிராய்டு எடுத்துக் கொண்டதன் விளைவாக ஜெயம் ரவிக்கு லிவர் பிரச்சனை வந்ததாம்.

Also read: சொந்த செலவில் சூனியம் வைத்த ஜெயம் ரவி.. தூங்கு மூஞ்சி அஸ்வின் போல் உளறிய பரிதாபம்

அதைத்தொடர்ந்து அவர் மூன்று மாத காலம் அதற்கான சிகிச்சையில் இருந்திருக்கிறார். தற்போது அனைத்து பிரச்சினைகளும் குணமடைந்த நிலையில் ஸ்டீராய்டு போன்ற அனைத்தையும் அவர் நிறுத்திவிட்டாராம். இப்படி பொன்னியின் செல்வன் என்ற கதாபாத்திரத்திற்காக அவர் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து இருக்கிறார்.

பொதுவாகவே மணிரத்னம் தன்னுடைய படங்களில் அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். இதை பல நடிகர்களும் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றனர். அந்த வகையில் அவரால் ஜெயம் ரவி உடல் பிரச்சனையில் சிக்கினாலும் அந்த கதாபாத்திரம் காலத்திற்கும் பெயர் சொல்லும் வகையில் அமைந்துவிட்டது என்பதுதான் உண்மை.

Also read: ஜெயம் ரவி, நயன்தாரா போதைக்கு ஊறுகாய் ஆன இறைவன்.. ஏட்டிக்கி போட்டியா வசூலித்த பொன்னியின் செல்வன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்