ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சொந்த செலவில் சூனியம் வைத்த ஜெயம் ரவி.. தூங்கு மூஞ்சி அஸ்வின் போல் உளறிய பரிதாபம்

Jayam ravi: பொதுவாக சைக்கோ மாதிரி திரில்லரான படங்கள் தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் ஜெயம் ரவியும் இந்த மாதிரி கதையில் நடித்தால் வெற்றி கிடைத்துவிடும் என்ற நோக்கத்தில் இறைவன் படத்தில் நடித்தார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த வாரம் 28ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.

ஏற்கனவே ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததில் இருந்து அவருக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டார்கள். அந்த வகையில் இந்த படத்தில் அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்து ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்று பார்த்தார்கள். ஆனால் படம் சொல்லுகிற அளவிற்கு இல்லாமல் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Also read: பிட்டு படம் போல குடும்பத்தோடு பார்க்க முடியாத ஜெயம் ரவியின் 6 மூவிஸ்.. மோசமான லிஸ்டில் சேர்ந்த இறைவன்

அத்துடன் இந்த மாதிரி ஒரு படத்தில் இவர் நடிக்காமலே இருந்திருக்கலாம் என்று கழுவி ஊத்தினார்கள். இதற்கிடையில் ஜெயம் ரவியே சும்மா இல்லாமல் தூங்கு மூஞ்சி அஸ்வினை போல என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறி இருக்கிறார். அதாவது இப்படத்திற்கான ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் லீலா பேலஸில் மிக பிரம்மாண்டமாக வைத்தார்கள்.

இப்படத்திற்கு சென்சார் போர்டில் இருந்து ஏ சர்டிபிகேட் கொடுத்தார்கள். அதுமட்டுமின்றி ஜெயம் ரவி இந்த நிகழ்ச்சியில் பேசும் பொழுது தேவையில்லாத நிறைய வார்த்தைகளை பேசி இருக்கிறார். அதாவது இறைவன் படத்தை யாரும் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டாம் என்று அவரே அவருடைய படத்திற்கு சூனியம் வைத்து பேசியிருக்கிறார்.

Also read: நெஞ்சை பதப்பதைக்க வைத்த சைக்கோ திரில்லர்.. ஜெயம் ரவியின் இறைவன் ட்விட்டர் விமர்சனம்

சும்மாவே ஒரு படம் ரிலீஸ் ஆகினால் அதற்கு ஏகப்பட்ட பிரச்சினை வரும். இதுல இவர் வேற குடும்பத்துடன் வந்துவிடாதீர்கள் என்று கூறியதால், படத்தின் மீது இருந்த நம்பிக்கை மக்களிடம் குறைந்துவிட்டது. அத்துடன் படம் பார்க்க ஆர்வமும் இல்லாமல் போய்விட்டது. இதுவே இந்த படத்திற்கு கிடைத்த முதல் நெகட்டிவ் விமர்சனமாக அமைந்துவிட்டது.

அத்துடன் படத்தை பார்த்தவர்களும் எங்களுடைய டைம் மற்றும் பணம் தான் வேஸ்டானது. மற்றபடி படத்தில் ஒண்ணுமே இல்லை. இந்த மாதிரி ஒரு படத்தையும், நடிப்பையும் நாங்கள் ஜெயம் ரவிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. தனி ஒருவன் மற்றும் பொன்னியின் செல்வன் படம் மாதிரி நல்ல கதைகளில் நடித்துவிட்டு ஏன் இந்த மாதிரி ஒரு கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவர்களுடைய விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

Also read: காசு வாரி கொடுத்தா ஓகே, ஜெயம் ரவின்னா கசக்குதா.. தூக்கிவிட்டவரை நன்றி மறந்த நயன்தாரா

- Advertisement -

Trending News