ஆண் தோற்றால் அனுபவம் பெண் தோற்றால் அவமானம்.. குணசேகரனிடம் கேவலமாக தோற்றுப் போன ஜனனி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் எந்த அளவுக்கு மக்களின் மனதை ஈர்த்ததோ அதைவிட தற்போது படு மட்டமாக போகிறது. எப்படி எல்லாம் ஒரு பொண்ணோட வாழ்க்கையை வீணடிக்கலாம் என்பதை அப்பட்டமாக மக்களுக்கு உணர்த்துவது தான் இந்த நாடகத்தின் நோக்கமா? ஒழுங்காக போய்க்கிட்டு இருந்த நாடகத்தை ஏன் இப்படி கெடுக்கிறீங்க என்று புலம்பும்படியாக இருக்கிறது.

என்ன தான் கரிகாலன் கதாபாத்திரம் மக்களுக்கு பிடித்திருந்தாலும், அவரை நாடகத்துக்கு முழுவதுமாக கொண்டு வருவதற்கு இப்படி ஒரு கீழ்த்தனமான வேலையை செய்து மக்களை மிகவும் ஏமாற்றம் அடைய வைத்து விட்டீர்கள். எதிர்நீச்சல் சீரியலை இதுவரை ரசித்துப் பார்த்த மக்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

Also read: தப்புக்கு மேல் தப்பு பண்ணும் கண்ணன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு பிடித்திருக்கும் ஏழரை

இந்த நாடகத்தை பொருத்தவரை டைட்டிலுக்கும் சரி, பாட்டுக்கும் சரி சம்பந்தமே இல்லாமல் தான் கதை நகர்ந்து வருகிறது. துணிச்சலாக வாடி வாசலை தாண்டி போராடி வாருங்கள் என்று சொல்லும் வரிகளுக்கு ஏற்ப தலைகீழாக தான் இந்த நாடகம் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் இருக்கும் ஜனனி டம்மியாக இருப்பதை பார்ப்பதற்கு வேதனையை கொடுக்கிறது.

ஆதிரை கரிகாலன் கல்யாணத்தை முடித்தவுடன் ரிஜிஸ்டர் ஆபீசிலும் குணசேகரன் நினைத்தபடி காரியத்தை சாதித்து விட்டார். இந்த விஷயம் கேள்விப்பட்ட ஜனனி ஏதோ தடுத்து நிறுத்த போற மாதிரி ஆவேசமாக கிளம்பி வந்தார். ஆனால் கடைசியில் அங்கேயும் போய் வேடிக்கை பார்த்து சோளக்காட்டு பொம்மையாகத் தான் இருந்தார். இதற்கு பேசாம பருத்தி மூட்டை குடவுனில் இருந்திருக்கலாம்.

Also read: எந்த நாய்க்கும் பதில் சொல்ல தேவையில்லை.. ஆவேசமாக பொங்கி எழும் குணசேகரன்

இதற்கிடையில் ஆதிரை வாழ்க்கை தான் பார்க்கவே பாவமாக இருக்கிறது. ஏன் இந்த மாதிரி எல்லாம் ஒரு கதையை மக்களுக்கு திணிக்கிறீர்கள் என்பது புரியவில்லை. ஃபேவரிட் சீரியல் மற்றும் மக்கள் மனதை கவர்ந்த டைரக்டர் என்று விருது வாங்கும்போது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. ஆனால் இப்பொழுது கதை எல்லாம் பார்க்கும் பொழுது தப்பான ஒருவரிடம் விருது போய்விட்டதோ என்று கேள்வியை எழுப்புகிறது.

அதிலும் சமீபத்தில் வந்த எபிசோடை பார்த்துட்டு தூங்குனா தூக்கம் வரமாட்டேங்குது. அந்த அளவுக்கு மட்டமான கதையை கொடுத்து எரிச்சல் அடைய வைக்கிறது. ஆக மொத்தத்தில் ஒரு தாலிய வச்சு மொத்த சீரியலையும் எதிர்நீச்சல் கெடுத்துக் கொண்டது. ஆண் தோற்றால் அனுபவம் பெண் தோற்றால் அவமானம் என்பது நன்றாக தெரிந்து வைத்திருந்தும் மொத்த பெண்களையும் கஷ்டப்படுத்தும் விதமாக ஒரு தாலியை வைத்து அவமானப்படுத்தி விட்டீர்கள் என்று பலரும் கொந்தளித்து வருகிறார்கள்.

Also read: குணசேகரனால் கதிகலங்கி போய் நிற்கும் ஆதிரை.. எதிர்பார்க்காத ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்