வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அப்பத்தாவிற்கு சாவு மணி அடித்த குணசேகரன்.. கண்ணில் விரலை விட்டு ஆட்டும் ஜனனி

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா இருந்தால் தன்னுடைய வீட்டில் உள்ள பெண்கள் தன்னை மதிக்க மாட்டார் என்று குணசேகரன் அப்பத்தா கதைக்கு முடிவு பண்ணிவிட்டார். அந்த வகையில் அப்பத்தாவுக்கு பாலில் தூக்கு மாத்திரையை கொடுத்து ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் பாம் வெடிப்பதற்கு ஒரு ஏற்பாட்டை செய்திருந்தார்.

ஆனால் இதில் இடையில் புகுந்து ஜீவானந்தம் அப்பத்தாவை காப்பாற்றி மறைமுகமாக அடைக்கலம் கொடுத்து வருகிறார். அத்துடன் குணசேகரன் மற்றும் அனைவரையும் நம்பும்படியாக அப்பத்தா இறந்துவிட்டார் என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு விஷயத்தையும் செய்திருக்கிறார். அதற்கேற்ற மாதிரி குணசேகரன் மற்றும் மருமகள்கள் அனைவரும் நம்பி விட்டார்கள்.

ஆனால் அப்பத்தாவின் இறப்பிற்கு குணசேகரன் தான் காரணம் என்று ஒட்டுமொத்த கோபத்துடன் மருமகள்கள் இருக்கிறார்கள். அதுவும் அப்பத்தாவின் சாம்பலை அவசர அவசரமாக ராமேஸ்வரத்தில் போய் கரைப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற குழப்பத்தில் ஜனனி இருக்கிறார். அடுத்து வீட்டிற்கு வந்த குணசேகரன் அப்பாவிற்கு செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதத்தை செய்வதற்காக குடும்பத்தில் இருப்பவர்களை வர வைத்திருக்கிறார்.

Also read: அப்பத்தாவுடன் காணாமல் போன குணசேகரன்.. பரபரப்பான திருப்பத்தில் எதிர்நீச்சல்

அப்படி குணசேகரனின் மாமா வந்ததும் இது ஏதோ ஆண்டவனின் செயல் மாதிரி தெரியவில்லை. மனுசங்க சூழ்ச்சி பண்ணி அப்பத்தாவிற்கு சாவு மணி அடித்தது போல் தெரிகிறது என்று சொல்கிறார். உடனே குணசேகரன் அப்பத்தாவின் படத்திற்கு மாலை போட்டு சடங்கு செய்யப் போகிறார். ஆனால் இது எதுவும் செய்யக்கூடாது. மீறி ஏதாவது பண்ணினா அதற்கு ஏற்ற நடவடிக்கையை நான் எடுப்பேன் என்று ஜனனி ஆவேசமாக கூறுகிறார்.

காரணம் அப்பத்தாவின் இறப்பிற்கு காரணம் குணசேகரன் தான் என்று நம்பிய ஜனனி மேற்கொண்டு எந்த ஒரு விஷயமும் குணசேகரன் கையால் செய்யக்கூடாது என்று நினைக்கிறார். அத்துடன் அவர் செய்த தவறுக்கு சரியான தண்டனை கொடுக்கும் விதமாக ஜனனி அடுத்தடுத்த நடவடிக்கையில் இறங்கப் போகிறார். அதுமட்டுமல்லாமல் குணசேகரனை தோற்கடிக்கும் விதமாக நான்கு மருமகள்களும் ஜெயித்துக் காட்டப் போகிறார்கள்.

இது குணசேகரனுக்கு விழும் முதல் அடியாக இருக்கப் போகிறது. குணசேகரனை டம்மியாக்கி பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டப் போகிறார். அந்த வகையில் குணசேகரன் கண்ணில் விரலை விட்டு ஆட்டப் போகிறார் ஜனனி. அதற்கு முதற்கட்டமாகத்தான் துணிச்சலுடன் பேசி சொந்தக்காலில் நின்னு ஜெயிக்கப் போகிறார்கள்.

Also read: இரண்டு வருஷத்துக்கு பின் எதிர்நீச்சலுக்கு விடிவு காலம்.. குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்

- Advertisement -

Trending News