திருமணத்திற்கு பின் உதவி செய்வதை கைவிட்ட அஜித்.. உண்மையான காரணத்தை கூறிய ஜெயிலர் பட நடிகர்

Ajith-Shalini: சன் டிவி தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் சீரியல் மூலம், பெரியவர்கள் முதல் குழந்தைகளுக்கு வரை பரிச்சயமானவர்தான் நடிகர் மாரிமுத்து. ஆதி குணசேகரன் என்று சொன்னால் தமிழ்நாட்டில் தெரியாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு சீரியலின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பார்த்தவர்தான் மாரிமுத்து.

57 வயதில் மரணம் அடைந்து இருந்தாலும், தன்னால் முடிந்தவரை நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார். இது நேற்று அவருடைய இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டவர்களை பார்க்கும் பொழுதே தெரிகிறது. நேற்றைய தினம் அவருடைய வீட்டின் முன்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே கூடி வந்து அவருக்கு பிரியாவிடை கொடுத்திருக்கிறார்கள்.

Also Read:சினிமாவுக்கு வரவே கூடாது, சினிமா உனக்கு வேண்டாம்.. மாரிமுத்து மகனை தடுக்க இப்படி ஒரு காரணமா?

மாரிமுத்து பல வருடங்களாக சினிமாவில் ஜெயிப்பதற்காக போராடிக் கொண்டிருந்த மனிதர். இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து கொண்டிருந்த போதுதான், வாலி படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் அஜித்குமாருடன் இவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டு இருக்கிறது. மாரிமுத்துவின் பேட்டி ஒன்றில் இதைப் பற்றி பேசி இருக்கிறார்.

பொருளாதார ரீதியாக ரொம்பவே கஷ்டப்பட்ட இவர், தன்னுடைய மகனை எல் கே ஜி யில் சேர்ப்பதற்கு, பீஸ் கட்ட ஒரு குறிப்பிட்ட தொகையை அஜித்திடம் உதவியாக கேட்டு இருக்கிறார். அஜித், தன்னுடைய உதவியாளரிடம், அந்தத் தொகை மட்டும் இல்லாமல் அந்த ஒரு வருடத்திற்கான மொத்த பீஸையும் கட்டி விட சொல்லிவிட்டாராம். அதேபோல் மாரிமுத்து வேண்டாம் என சொல்லும் வரை, அவருடைய மகனுக்கு வருடா வருடம் பீஸ் கட்டி விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:இனி அடுத்த எதிர்நீச்சல் குணசேகரன் இவர் தான்.. மாரிமுத்து சாயலில் இருப்பதால் திருச்செல்வம் எடுக்கும் முடிவு

அதன் பின்னர் அஜித் தரப்பிலிருந்து வருடந்தோறும் மாரிமுத்துவை தொடர்பு கொண்டு, பீஸ் தொகை எவ்வளவு என்று கேட்டு கட்டி விடுவார்களாம். இப்படித்தான் அவரின் மகன் பத்தாவது வரை படித்திருக்கிறார். பின்னர் ஷாலினி உடனான திருமணத்திற்கு பிறகு அஜித்தால் இந்த உதவியை தொடர்ந்து செய்ய முடியவில்லை என்பது போல் மாரிமுத்து சொல்லி இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு அஜித் வேறொரு ஆளாக மாற வேண்டி இருந்தது என்று சூசகமாக சொல்லி இருக்கிறார்.

இதிலிருந்தே திருமணத்திற்கு பிறகு, அஜித் ஷாலினியின் மொத்த கண்ட்ரோலில் வந்துவிட்டார் என்பது நன்றாக தெரிகிறது. அவர் உதவி செய்ய நினைத்தாலும், செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்ததைத்தான் மாரிமுத்து மறைமுகமாக சொல்லி இருக்கிறார். ஷாலினியால்தான் இந்த உதவி தடுக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இந்த பேட்டியை பார்த்த பின் வந்திருக்கிறது.

Also Read:57 வயது எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து மரணம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன திரையுலகம்

- Advertisement -