தமன்னாவை வைத்து போடும் பிள்ளையார் சுழி.. எதிர்பார்ப்பை மிரள வைக்கும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ

jailer-rajini
jailer-rajini

Jailer: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு சில வருட இடைவெளியில் இப்படம் வர இருப்பதால் ரஜினி ரசிகர்கள் மிகப்பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோன்று பீஸ்ட் படத்தில் தனக்கு கிடைத்த விமர்சனங்களை மாற்றி அமைக்கும் ஒரு வாய்ப்பாக இப்படத்தை இயக்கியிருக்கும் நெல்சன் ரிலீஸ் நாளை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அனிருத் இசையில் சூப்பர் ஸ்டாருடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Also read: கவுண்டமணியை ஒதுக்கிய ரஜினி, கமல்.. திருப்பி அடித்த கர்மா

பொதுவாக நெல்சன், அனிருத் கூட்டணியில் முதல் பாடல் வெளியாவதற்கு முன்பே ஒரு ப்ரோமோவை வெளியிட்டு ரசிகர்களின் பிபியை ஏற்றி விடுவார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் கலகலப்பாக இருக்கும் அந்த ப்ரோமோவை பார்ப்பதற்கு என்று தனி கூட்டம் இருக்கிறது.

அதன் காரணமாகவே தற்போது வெளியாக இருக்கும் ஜெயிலர் முதல் பாடல் ப்ரோமோவை ரசிகர்கள் காலை முதலே மிகவும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் மாலை 6 மணிக்கு வரும் என்று நினைத்திருந்த ப்ரோமோ ஒரு மணி நேரம் தாமதமாக 7 மணிக்கு தான் வந்தது. இப்படி பலரையும் காக்க வைத்த அந்த ப்ரோமோவை தற்போது அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Also read: அச்சு அசல் ரஜினி போல் இருந்த பாக்யராஜ் பட நடிகர்.. மூக்கு, ஹேர் ஸ்டைல் என அப்படியே சூப்பர் ஸ்டார் தான்

அதில் வழக்கம் போல நெல்சன் பாட்டு வாங்குவதற்காக அனிருத்தை தேடி செல்கிறார். அப்போது இருவருக்கொளும் சுவாரசியமான உரையாடல் நடக்கிறது. அதில் நெல்சன் இந்த வாட்டி எந்த பில்டப்பும் வேண்டாம், பாட்டை கொடுங்கள் என்று சொல்கிறார். மேலும் எதை சொன்னாலும் கிண்டல் அடிக்கிறார்கள் அதனால் பாட்டு மட்டும் போதும் என்கிறார்.

உடனே அனிருத் என்ன பாட்டு என்று கேட்க அதற்கு அவர் தமன்னாவின் பாட்டு என சொல்கிறார். அது மட்டுமல்லாமல் அது ஐட்டம் சாங் என்ற ஒரு குறிப்பையும் கொடுக்கிறார். இப்படியாக வந்த அந்த ப்ரோமோவில் பாட்டு எழுதுவதற்காக அருண் ராஜா காமராஜ் வருகிறார். இப்படி செல்லும் அந்த வீடியோவில் முதல் பாடல் ஆறாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே தற்போது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

Advertisement Amazon Prime Banner