அச்சு அசல் ரஜினி போல் இருந்த பாக்யராஜ் பட நடிகர்.. மூக்கு, ஹேர் ஸ்டைல் என அப்படியே சூப்பர் ஸ்டார் தான்

Super Star Rajini: தன்னுடைய 72 வயதிலும் எனர்ஜி குறையாமல் இளம் நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு டாப் நடிகராக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்தால் யாருக்கு தான் பொறாமை வராது. இதைவிட அவர் 80களில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தபோது சூப்பர் ஸ்டாரின் சாம்ராஜ்யத்தை முடித்து விட வேண்டும் என அவரைப் போலவே ஒரு நடிகரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினர்.

ரஜினி போலவே ஒரு நடிகர் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் இவரை பார்த்தவர்கள் அனைவரும் ரஜினி போலவே இருக்கிறீர்கள் எனவும் பேச ஆரம்பித்தனர். இவருடைய பெயரும் ரஜினிகாந்த் பெயரை ஒத்தது தான். அவர் வேறு யாரும் அல்ல ஆக்டர் நளினிகாந்த்.

 : 75 படங்கள் இயக்கி சாதனை படைத்த இயக்குனர்.. ஆலமரம் போல் சிவாஜியை வளர்த்த டைரக்டர்

நளினிகாந்த்தின் முதல் படம் ‘காதல் காதல் காதல்’. இந்த படத்திற்குப் பிறகு அழைத்தால் வருவேன், இதயம் பேசுகிறது போன்ற படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு அச்சு அசல் அப்படியே ரஜினியின் மூக்கு, ஹேர்ஸ்டைல் போன்றவை இருந்ததால் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது.

ஆனால் இவரை அன்றைய காலத்தில் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக கொண்டு வர திட்டமிட்டனர். இதனால் இவரை ரஜினியுடன் ஒப்பிடும்போது ரசிகர்களின் மத்தியில் காரசாரமான விமர்சனங்கள் குவிந்தது. பிறகு நளினிகாந்த் ஹீரோவாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிப்பதை தவிர்த்து வில்லனாக நடிக்க துவங்கினார்.

Also Read: ஜெயிலரை ஓரங்கட்ட தயாராகும் லியோ.. நிற்க நேரமில்லாமல் பிசியான லோகேஷ்

சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்த நளினிகாந்த், சிவாஜியுடன் சத்யம் என்ற படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தார். இந்த படம் திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் ஹிட் ஆனது. அதன் பின் நிறைய எதிர்மறையான கேரக்டர்கள் இவரை தேடி வந்தது. பாக்யராஜ் நடிப்பில் வெளியான ராசுக்குட்டி படத்திலும், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான அண்ணாதுரை படத்தில் அவருக்கு தந்தையாகவும் நடித்து சினிமாவில் நீடித்தார்.

இப்போது நளினிக்கத்துக்கு வயதாகிவிட்டது. அதனால் பெரும்பாலும் படங்களில் நடிப்பதை தவிர்த்து, சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘காற்றுக்கென்ன வேலி’ என்ற சீரியலில் கதாநாயகி வெண்ணிலாவின் அப்பாவாக நடித்த வருகிறார்.

அச்சு அசல் ரஜினி போல் இருக்கும் நளினிகாந்த்

rajini-cinemapettai
rajini-cinemapettai

Also Read: ஹீரோவாக நடித்த பொற்காலத்தில் வில்லனாகவும் களமிறங்கிய சிவாஜியின் 5 படங்கள்.. ரங்கோன் ராதாவை மறக்க முடியுமா?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்