சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

தர்ஷினியின் வாக்குமூலத்தால் நடந்த திருப்பம்.. குணசேகரனுக்கு முடிவு கட்ட ஈஸ்வரி நகத்தும் காய்

Ethirneechal: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டி வருகிறது. இடையில் கொஞ்சம் சோர்வடைந்திருந்த சீரியல் தற்போது மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. இதன் மூலம் இயக்குனர் அடுத்து என்ன என யோசிக்க வைத்திருக்கிறார்.

அதன்படி நேற்றைய எபிசோடில் தர்ஷினி வீடியோ மூலமாக கோர்ட்டில் தன் வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தார். அதில் ஈஸ்வரி தான் தன்னை கடத்தியதாகவும் ஜீவானந்தம் அதற்கு துணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் என் அப்பாவிடம் சொல்லி என்னை காப்பாற்ற சொல்லுங்கள். ஜீவானந்தம் என்னை கொடுமைப்படுத்துகிறார் என்று கூறினார். இதை பார்த்து குழப்பம் அடையும் ஈஸ்வரி அடுத்ததாக செய்த விஷயம் தான் யாரும் எதிர்பாராதது.

Also read: கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை தான்.. மீண்டும் சிக்கலில் மாட்டி தவிக்கும் பாக்யா

அதாவது இதில் உண்மை இல்லை என ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகியோர் பதறிப் போய் சொன்னார்கள். ஆனால் ஈஸ்வரி, தர்ஷினி சொன்னது உண்மைதான். மற்றவர்களுக்கு இதில் சம்பந்தம் கிடையாது. நான்தான் கடத்தினேன் என்று கோர்ட்டில் வாக்கு மூலம் கொடுத்தார். இதனால் மற்றவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.

இது குழப்பத்தை ஏற்படுத்தினாலும் ஈஸ்வரியின் மாஸ்டர் பிளான் என்ன என்பது புரிகிறது. அதாவது மற்றவர்கள் வெளியில் இருந்தால்தான் தர்ஷினியை காப்பாற்ற முடியும். ஏனென்றால் அந்த வாக்குமூலத்தில் தர்ஷினியை யாரோ கட்டாயப்படுத்தி பேச வைத்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இப்படி விறுவிறுப்பாக நகரும் சீரியலில் இன்றைய ப்ரோமோவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அதாவது குணசேகரன் என் மகளை நானே கண்டுபிடிக்கிறேன். நான் இல்லாமல் நீங்க எப்படி வாழ்றிங்க பார்க்கிறேன் என சவால் விடுகிறார். ஆனால் அவருக்கு முடிவு கட்ட ஈஸ்வரி தயாராகி விட்டார் என்பது அவருக்கு தெரியவில்லை.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸில் வெடிக்கும் சக்காளத்தி சண்டை.. கோபத்தை கக்கும் கதிர் 

- Advertisement -

Trending News