அக்காவை வைத்து மட்டம் தட்டப்படும் தங்கை.. சுட்டு போட்டாலும் நடிப்பே வரலைன்னு துரத்தப்படும் திவ்யதர்ஷினி

Dhivyadharshini And Priyadarshini: எதிர்நீச்சல் ரேணுகாவின் முழு பெயர் பிரியதர்ஷினி நீலகண்டன், இவர் சிங்கப்பூரில் பிறந்தார். இவரது அப்பா இறந்த உடனே இவரின் குடும்பத்தினர் அனைவரும் சென்னைக்கு குடியேறினர். இவருக்கு ஒரு தங்கையும், தம்பியும் இருக்கிறார்கள். தங்கை திவ்யதர்ஷினி “டிடி” என அழைக்கப்படுபவர், இவர் சின்னத்திரையில் தொலைக்காட்சி தொகுப்பாளனியாக இருக்கிறார்.இவரது தம்பி சுதர்ஷன் துபாயில் பைலட்டாக இருக்கிறார்.

இவருக்கு சிறுவயதிலிருந்தே நடனத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம். அதற்காக தூர்தர்ஷனில் நாடாகும் “வளரும் கலைஞர்” எனும் நடனப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார். வாய்ப்புக்காக பலமுறை சென்றார், இதனைப் பார்த்த அங்கு இருந்த தயாரிப்பாளர் ஒருவர் இவருக்கு வாய்ப்பு அளித்தார்.”திரை மாலை” என்னும் நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக வாய்ப்பு கிடைத்தது.

Also Read:ஜோதிகா சிம்ரன் செய்த அலப்பறையால் டீலில் விட்ட வெங்கட்பிரபு… தளபதி 68 படத்திற்காக இளவரசியிடம் சரணடைந்த சம்பவம்

அதனை தொடர்ந்து சன் டிவியில் “மலரும் மொட்டுக்கள்” எனும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சன் டிவியில் வேலை செய்துள்ளார். என்னதான் இவர் பல வருடங்களாக மீடியாவில் இருந்தாலும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. ஆனால் தற்போது சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரேணுகாவின் நடிப்பு உச்சம் தொட்டுள்ளது. பெரிய நடிகைகளை தோற்றுவிடும் அளவிற்கு தற்போது நடித்துள்ளார். அதிலும் அவர் பேசும் தோரணை, ரசிகர்கள் அனைவராலும் மிகவும் விரும்பும் படி உள்ளது. அவரின் தந்தையிடம் இருந்து வந்தது என்று கூறினார்.

ஆனால் இவரின் தங்கை டி டி இவருக்கு முன்னரே மீடியாவில் வந்து, நிகழ்ச்சி தொகுப்பாளனியாக இருந்து உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளார்.  ஆனால் அவருக்கு நடிப்பே வரவில்லை. அந்த அளவிற்கு நடிக்க தெரியவில்லை. அவர் நடித்த படங்களும் எதுவும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவும் இல்லை.

Also Read:46 வயதில் பெயர் மாற்ற என்ன காரணமோ.. வெளியில் வரும் ராகவா லாரன்ஸ் பூசிய சாயம்

சமீபத்தில் வெளியான “மந்தகம்” என்னும் வெப்சீரிஸில் டிடி நடித்துள்ளார், அதில் அவரின் நடிப்பை பார்க்கவே முடியவில்லை. இவர் ஏற்கனவே செய்து கொண்டிருந்த தொகுப்பாளனி வேலையும் தற்போது எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை. அதனால் நடித்தாவது சம்பளம் வாங்கலாம் என்று நினைத்தார். தற்போது அதுவும்  சரியாக அமையவில்லை. அந்த அளவிற்கு மோசமாக நடித்து வருகிறார். இதனால் தான் இவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கிறது.

ஆனால் இவருக்கு கிடைத்த பேரும் புகழும் பல வருடங்களாக மீடியாவில் இருக்கும் இவரது அக்கா பிரியதர்ஷினிக்கு கிடைக்கவில்லை. பெரிய அளவில் பிரபலமும் ஆகாமல் இருந்தார். தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமாகிவிட்டார். இவரது தங்கைதானா டிடி என கேட்கும் அளவிற்கு மோசமாக நடிக்கிறார் திவ்யதர்ஷினி, ஆனால்  இவரின் அசத்தலான நடிப்பினால் பயங்கரமாக வளர்ந்து விட்டார் பிரியதர்ஷினி.

Also Read:விஜய் சேதுபதி பயந்து விலகிய பயோகிராபி.. கிரிக்கெட்டராக முரளிதரனை பெருமைப்படுத்திய 800 ட்ரெய்லர்

Next Story

- Advertisement -