ஜோதிகா சிம்ரன் செய்த அலப்பறையால் டீலில் விட்ட வெங்கட்பிரபு… தளபதி 68 படத்திற்காக இளவரசியிடம் சரணடைந்த சம்பவம்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி68 படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் இப்படத்தின் கதைக்களம் எப்படிப்பட்டது என்பதை விளக்கும் விதமாக வெளிநாட்டில் வெங்கட் பிரபு எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகும் நிலையில், விஜய்யும் இப்படத்திற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

மேலும் நடிகர் விஜய்யை இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இதனிடையே வயதான தோற்றம் மற்றும் இளமை தோற்றம் என மாற்றக்கூடிய வகையில் இந்தியன் 2 படத்தில் கமலுக்காக பயன்படுத்திய வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பத்தை தளபதி68 படத்தில் விஜய்க்கு பயன்படுத்த வெளிநாட்டில் இப்படத்தின் படக்குழு தங்களது வேளையில் இறங்கியுள்ளது.

Also Read: சிம்ரனால் கடுப்பான ஜோதிகா.. முட்ட கண்ணை உருட்டி சந்திரமுகியாக மாறி வெங்கட் பிரபுவுக்கு கொடுத்த நோஸ் கட்

இது ஒருபுறமிருக்க நடிகர் விஜய்க்கு ஜோடியாக தளபதி 68 படத்தில் எந்த நடிகை நடிக்க போகிறார்கள் என்ற குழப்பம் தான் நாளுக்கு தான் ரசிகர்களை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளது. அதன்படி அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள்மோகனும் தேர்வாகினர். ஆனால் இப்படத்தில் ஜோதிகா நடிப்பதிலிருந்து திடீரென விலகியதால் இளவரசி நடிகையிடம் தற்போது வெங்கட் பிரபு சரணடைந்துள்ளாராம்.

நடிகை ஜோதிகா, விஜய்யுடன் இணைந்து குஷி, திருமலை உள்ளிட்ட படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நிலையில், 20 வருடங்கள் கழித்து விஜய்யுடன் ஜோதிகாவை ஜோடி சேர்த்து பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் நடிகை ஜோதிகா, நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன், மகன் விஜய்க்கு அம்மாவாக என்னால் நடிக்க முடியாது என தளபதி 68 படத்திலிருந்து திடீரென விலகியுள்ளார்.

Also Read: லியோவை ஓரம் கட்ட வரும் தளபதி 68.. லோகேஷுக்கு டஃப் கொடுக்கும் வெங்கட் பிரபுவின் இந்த ஸ்கிரிப்ட

இவருக்கு அடுத்தபடியாக நடிகை சிம்ரனிடமும் வெங்கட் பிரபு அணுகியுள்ளார். ஏற்கனவே நடிகை சிம்ரன் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் அப்பா சூர்யாவுக்கு ஜோடியாகவும், மகன் சூர்யாவுக்கு அம்மாவாகவும் நடித்திருப்பார். இதை மனதில் வைத்துக்கொண்டு சிம்ரனிடம் தளபதி68 படத்தில் நடிக்க கூறி கேட்டபோது, அவரும் ஏற்கனவே இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்து விட்டேன் என கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான வசீகரா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த புன்னகை இளவரசி சினேகாவிடம் தளபதி 68 படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். நடிகை சினேகா ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தில் நடித்துள்ள நிலையில், தளபதி68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: தளபதி 68 லேட்டஸ்ட் அப்டேட்.. பிகில் பாணியை கையில் எடுக்கும் வெங்கட் பிரபு

- Advertisement -