திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

அக்கப்போர் பண்ணும் பாக்யா.. கூட்டு சேர்ந்து கொண்ட அப்பா, மகள்

Bhakyalakshmi Serial: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி. பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த இனியா இப்போது கல்லூரி சேர்ந்திருக்கிறார். இந்நிலையில் பாக்யாவுக்கும் கல்லூரி சென்று படித்து பட்டம் வாங்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. எந்த வயதிலும் படிப்புக்கு தடை இல்லை என்பது எல்லோரும் பாராட்ட வேண்டிய விஷயம் தான்.

ஆகையால் பாக்யா எடுத்த இந்த முடிவுக்கு பலரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்த விஷயத்தில் கோபி பக்கம் தான் நிற்கிறார் இனியா. ஏனென்றால் கண்டிப்பாக ஒரு பெண் கல்லூரி படிக்கும் போது அவருடைய அம்மாவும் அதே கல்லூரியில் படித்தால் இனியாவை சக மாணவ, மாணவிகள் கிண்டல் செய்வார்கள் என்ற பயம் ஏற்பட்டிருக்கிறது.

Also Read : வித்தியாசமான டைட்டிலுடன் முதல் முறையாக ஹீரோவான விஜய் டிவி புகழ்.. யோகி பாபுவை தொட்டுருவாரு போல

இதனால் பாக்யா கல்லூரிக்கு செல்வது இனியாவுக்கு விருப்பமில்லாமல் இருக்கிறது. முதல் நாள் இனியா கல்லூரி செல்ல உடன் பாக்யாவும் செல்கிறார். மேலும் அங்கு பாக்யா பண்ணும் அக்கப்போரை பார்த்து இனியா மற்றும் கோபி இருவருமே கடுப்பாகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் தந்தையோடு இனியா இப்போது ஒட்டிக் கொள்கிறார்.

அவரோடு தான் காலேஜுக்கு போவது மற்றும் வருவது என இருக்கிறார். மேலும் இனியா இவ்வாறு செய்வது எழிலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்நிலையில் முதல் நாள் பாக்யா வகுப்பறைக்கு செல்லும் போது பல பிரச்சனைகளை சந்திக்க இருக்கிறார். ஏனென்றால் சக மாணவிகள் எல்லாம் இளமையாக இருக்கிறார்கள்.

Also Read : சும்மா இருந்த கேப்டனை சொறிஞ்சு விட்ட விஜய் டிவி.. நாக்கை துருத்திக் கொண்டு வெளுத்து வாங்கிய சம்பவம்

ஆகையால் இந்த வயதில் பாக்யா படிக்கிறாரா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்துள்ளது. மேலும் இதிலும் பாக்யா பல தடைகளை கடந்து பட்டம் பெற இருக்கிறார். ஆனால் பாக்யா தற்போது தொழிலில் மிகவும் பிசியாக இருந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது கல்லூரி படிப்பதனால் அவரது தொழில் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது.

அவர் இரண்டையும் எவ்வாறு சரியாக பயன்படுத்தி சாதிக்க உள்ளார் என்ற சுவாரசியமான கதைகளத்துடன் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அம்மா கணக்கு என்ற படத்தில் அமலா பால் தனது மகளோடு படிப்பது போல் பாக்கியலட்சுமி தொடரிலும் இயக்குனர் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல காட்சிகளை அரங்கேற்றி வருகிறார்.

Also Read : எதிர்நீச்சலை காலி பண்ண விஜய் டிவி போட்ட பலே திட்டம்.. முக்கிய கேரக்டரை தூக்க நடந்த சதி

- Advertisement -

Trending News