ஏர்போர்ட்டில் அட்டகாசம் செய்யும் இந்தியன் தாத்தா.. முதன்முதலாக வெளிவரும் கமலின் இரண்டு படங்கள்

Actor Kamal: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர் கமலஹாசன். இந்நிலையில் இவரின் இந்தியன் 2 படப்பிடிப்பு பற்றிய சிறு தகவலை இங்கு காண்போம்.

1996ல் ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை பெற்ற படம் தான் இந்தியன். இப்படத்தின் பாகம் 2 எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ங்கருக்கு அடுத்தடுத்து பல தடைகள் ஏற்பட்டு இப்படம் தற்பொழுது கிளைமாக்ஸ் காட்சி வரை படப்பிடிப்பு சென்றுள்ளது.

Also Read: முதல்வர் ஆசை இருந்தா மட்டும் போதாது.. லியோ பாடலை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் முக்காவாசி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இந்தியன் தாத்தாவின் படப்பிடிப்பு சென்னை ஏர்போர்ட்டில் நடக்க இருக்கிறது என்ற அறிவிப்பு வந்தது. அதைத்தொடர்ந்து இப்பட பிடிப்பிற்கான உரிமம் விமான நிலையத்தில் பெறாததால், படப்பிடிப்பு தாமதமானது.

அதன்பின் தயாரிப்பாளர் தரப்பில் இப்பட பிடிப்பின் உரிமத்திற்கு சுமார் ஒரு கோடி 24 லட்சம் கட்டி உரிமம் பெறப்பட்டதாம். அதைத்தொடர்ந்து இந்தியன் தாத்தாவின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிப்பு வந்துள்ளது.

Also Read: தமிழில் ஆட்டிப் படைக்கும் 5 அக்கட தேசத்து நடிகர்கள்.. சென்னை காரன்னு காலரை தூக்கும் அல்லு அர்ஜுன்

இது ஒரு புறம் இருக்க, தெலுங்கில் பான் இந்தியா நட்சத்திரமான பிரபாஸ் நடிப்பில் ப்ராஜெக்ட் கே உருவாக உள்ளது. அப்படத்தில் கமல் வில்லனாக இடம் பெறுவதாக அறிவிப்பு வந்தது. மேலும் குறிப்பாக, தமிழில் பிரபலங்களுக்கு வில்லனாக கமல் இதுவரை எந்த படமும் நடிக்காத நிலையில் இப்படத்தை மேற்கொள்வது ரசிகர்களிடையே பல எதிர்ப்புகளை முன்வைத்து வருகிறது.

இருப்பினும் இப்படத்தில் பிரபாஸ்க்கு வில்லனாக நடிக்க சுமார் 150 கோடி சம்பளத்தை கமல் வாங்க உள்ளாராம். மேலும் இப்படனும் 2024 பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு இரட்டை படங்களுடன் வசூல் வேட்டையில் இறங்குவார் கமல் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: நெல்சன், அட்லீயை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய லோகேஷ்.. லியோ படத்தின் போஸ்டர் காப்பியா?

- Advertisement -