முதல்வர் ஆசை இருந்தா மட்டும் போதாது.. லியோ பாடலை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை

Leo First Single: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சூழலில் நேற்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு படகுழுவினர் லியோ படத்தின் முதல் பாடலை வெளியிட்டு இருந்தனர். அனிருத் இசையில் விஜய்யின் குரலில் உருவான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி இந்த பாடலின் மூலம் விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏனென்றால் அரசியலுக்கு சவுக்கடி கொடுக்கும்படியான வார்த்தைகள் இப்பாடலில் இடம்பெற்று இருந்தது. இந்த சூழலில் ஒருபுறம் ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடி தீர்க்க ப்ளூ சட்டை மாறன் விஜய்யை விமர்சித்து இருக்கிறார்.

Also Read : 40 வருடங்களாக விஜய்யின் இமேஜை கெடுத்து அசிங்கப்படுத்திய சம்பவங்கள்.. அரசியல் முடிவுக்கு காரணம் இதுதான்

அதாவது ஏற்கனவே லியோ படத்தின் முதல் பாடல் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் விஜய் தம்மடிக்கும் படியான போஸ்டர் வெளியாகி இருந்தது. இப்போது அந்த பாடலில் போஸ்டர் அடி, அண்ணா ரெடி என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்தது.

இதை பார்த்தவுடன் சும்மா விடுவாரா ப்ளூ சட்டை மாறன், போஸ்டர் அடி, அண்ணன் ரெடி என்று பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதே, பொது இடங்களில் போஸ்டர் ஒட்டி அசுத்தப்படுத்துவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் என கூறியுள்ளது.

Also Read : விஜய் பிறந்தநாளில் திரிஷா வெளியிட்ட புகைப்படம்.. 14 வருடங்கள் ஆகியும் மாறாத கெமிஸ்ட்ரி

ஆகையால் முதல்வர் ஆசை இருந்தா மட்டும் போதாது. சிகரெட் புடிக்கற போஸ்டரை ரிலீஸ் பண்ணுறதும், போஸ்டர் அடிக்க சொல்லி பாடுறதும் எந்த வகையான சமூக அக்கறை என விஜய்யை வினவி உள்ளார். அதாவது அரசர் எவ்வழியோ மக்களும் அவ்வழி தான் செல்வார்கள். தலைவன் சரியாக இருந்தால் தான் நாட்டு மக்களும் நன்றாக செயல்படுவார்கள்.

இப்போது அரசியல் ஆசை இருக்கும் விஜய் தனது படத்தில் சமூக அக்கறை கொண்ட விஷயங்களை சொல்லாமல் சிகரெட் பிடிப்பது, போஸ்டர் அடிப்பது என தவறான பழக்கவழக்கங்களை கற்றுத் தருவதாக ப்ளூ சட்டை மாறன் விலாசி உள்ளார். இந்த விஷயம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : விஜய்யின் ஆசையை போட்டு உடைத்த இயக்குனர் பாசில்.. இன்று வரை நிறைவேறாத காரணம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்