கல்யாணமான நேரமே சரியில்லை, 250 கோடி சொத்து போச்சு.. இந்தியன் 2 பட நடிகைக்கு வந்த சிக்கல்

Indian 2: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 வரும் ஜூலை 12ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பும் இருக்கிறது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் ஆரவாரமாக வெளியானது.

அதில் தசாவதாரம் ஸ்டைலில் கமல் பல கெட்டப்புகளை போட்டிருந்தார். அது மிரட்டலாக இருந்த நிலையில் சேனாதிபதியான இந்தியன் தாத்தாவைக் காண ரசிகர்கள் இப்போது ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரகுல் பிரீத் சிங் தற்போது ஒரு சிக்கலில் மாட்டியிருக்கிறார். தமிழ் தெலுங்கு என பிரபலமாக இருந்த இவர் பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

அங்கு நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி மேல் இவர் காதல் வயப்பட்டார். சில காலம் டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடி கடந்த பிப்ரவரி மாதம் தான் திருமணம் செய்து கொண்டனர்.

250 கோடி நஷ்டத்தில் ரகுல் ப்ரீத் சிங்

சமீபத்தில் கூட இவர்கள் தங்களுடைய ஹனிமூன் போட்டோ, யோகா செய்யும் போட்டோ ஆகியவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் 250 கோடி நஷ்டத்தில் சிக்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது இவருடைய தயாரிப்பில் வெளிவந்த கடந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதனால் அவருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அதை தீர்ப்பதற்காக அவர் தனக்கு சொந்தமான ஏழு மாடி கட்டிடத்தை விற்று விட்டாராம்.

கடுமையான நிதி நெருக்கடி தான் இதற்கு காரணம். அதனாலயே பல கோடி மதிப்புள்ள இந்த சொத்தை அவர் விற்றுள்ளார். இதில் தான் அவருடைய அலுவலகம் இயங்கி வந்தது. அதை இப்போது வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.

கல்யாணமான சில மாதங்களிலேயே இப்படி ஒரு சிக்கலில் அவர் சிக்கி இருக்கிறார். இது பாலிவுட் திரையுலக வட்டாரத்தில் கல்யாண ராசி சரியில்லை என்ற ரீதியில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்தியன் 2 நடிகைக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி

Next Story

- Advertisement -