ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நாசருக்கு நிகராக நடிக்கும் 5 ஹீரோக்கள்.. வில்லத்தனத்தில் நாசரை மிஞ்சிய முத்துப்பாண்டி

5 heroes who act like Nasser: நம்ம சினிமால தவிர்க்க முடியாத முக்கிய நடிகர்களில் ஒருவர் நாசர். இவர் 1985 கல்யாண குழந்தைகள் திரைப்படத்தின் மூலம் பயணத்தை தொடங்கினார். வில்லனாக, கதாநாயகனாக நிறைய படங்களில் அசத்தி இருக்கிறார். எந்த ரோல் கொடுத்தாலும் ஈசியாக நடித்து விடுவார். இவருக்கு ஈக்குவலாக தமிழ் சினிமாவில் நடிக்கும் ஐந்து நடிகர்கள் யார் என்று பார்க்கலாம்.

தம்பி ராமையா: 2000ங்களில் ஆரம்பித்து தற்போது வரை நகைச்சுவை நடிகராக அனைவரையும் மகிழ வைத்தவர் தம்பி ராமையா. ஆறு, ஜில்லுனு ஒரு காதல், மைனா, கும்கி போன்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமும் அடைந்தவர்.சாட்டை திரைப்படத்தில் வில்லத்தனத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்திருப்பார். நாசருக்கு காம்பெடிஷனாக நடிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

Also Read:கிரிமினலாக யோசிக்கும் எஸ்ஜே சூர்யா.. பட்ஜெட் ரீதியாக சம்பளத்தை பிரித்து ஹீரோ வாய்ப்புக்கு அடிபோடும் வில்லன்

ஜெயப்பிரகாஷ்: நாசருக்கு இணையாக 2000 முதல் தற்போது வரை நடித்து வருபவர் ஜெயப்பிரகாஷ். பசங்க, நாடோடிகள், மங்காத்தா என்ற திரைப்படங்களால் பயங்கர பேமஸ் ஆனார். ஆனால் தற்போது வரை பெரும்பாலும் துணை நடிகராக தந்தை கதாபாத்திரத்தில் அதிகம் நடித்திருக்கிறார். இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

எம் எஸ் பாஸ்கர்: சிறந்த துணை நடிகர்கள் லிஸ்டில் எப்போதுமே இடம் பிடித்து இருப்பவர் எம் எஸ் பாஸ்கர். இவரும் நாசர் பீக்கில் இருக்கும்போது அவருக்கு இணையாக நடித்தவர். மொழி, சிவாஜி, சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படங்கள் மூலம் பிரபலமாக இருந்தவர். டாக்டர், போலீஸ், கண்டக்டர், டீச்சர், மெண்டல் போன்ற எந்த ரோல் கொடுத்தாலும், நாசரை போலவே கச்சிதமாக நடிப்பவர்.

Also Read:நான் வீழ்வேனென்று நினைத்தாயோ, பதிலடிக்கு தயாராகும் விஜய்.. மிரட்ட வரும் லியோ ட்ரெய்லர், எப்ப தெரியுமா?

சத்யராஜ்: 240 திரைப்படங்களுக்கு மேலே பல மொழிகளில் நடித்தவர் சத்யராஜ். ஹீரோ, வில்லன் இன்னும் பல துணை நடிகர் கதாபாத்திரங்களில் மாஸ்ஸாக நடிக்க கூடியவர். 70லிருந்து 85 குள்ளவே 75 படங்கள் நடித்துள்ளார். பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பாவாக தூள் கிளப்பி இருப்பார், இவர் நாசர் காலகட்டத்தில் இருந்தே நடித்துவரும் நடிகர்.

பிரகாஷ் ராஜ்: தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, இங்கிலீஷ் போன்ற மொழிகளில் எண்ணில் அடங்காத திரைப்படங்களை நடித்தவர் பிரகாஷ் ராஜ். கில்லி திரைப்படத்தில் நாசரை மிஞ்சும் அளவிற்கு தன்னுடைய வில்லத்தனம் கலந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்திருப்பார். அந்த காலத்தில் இருந்து நாசருக்கு போட்டியாக இவரது நடிப்பு அமைந்திருக்கும்.

Also Read:அடுத்த வருட ஆஸ்கருக்கு செல்லும் தரமான படம்.. உண்மை சம்பவத்திற்கும் உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம்

- Advertisement -

Trending News