அடுத்த வருட ஆஸ்கருக்கு செல்லும் தரமான படம்.. உண்மை சம்பவத்திற்கும் உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம்

Oscar Award Movie: பொதுவாக சினிமாவில் வெளிவரும் படங்களில் மனிதநேயத்தை கொண்டாடும் படமாக இருந்தால் அந்தப் படம் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுவிடும். அது எந்த மொழி படங்களாக இருந்தாலும் அனைத்து விதமான ரசிகர்களும் பார்த்து கைத்தட்டல்களை கொடுத்து விடுவார்கள்.

அந்த வகையில் இந்த வருடம் மே மாதம் வெளிவந்த 2018 என்ற படம் கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்டு அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

Also read: 8 வருஷம் சினிமாவையே வெறுக்க வைத்த வடிவேலு.. மேடையிலேயே கண்ணீர் விட்ட இயக்குனர்

அத்துடன் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை காட்டியதால் 160 கோடி வரை வசூல் சாதனையை படைத்தது. அந்த அளவிற்கு இப்படத்தின் கதையானது உயிரூட்டும் வகையில் ஒரு விதமான உணர்வை ஏற்படுத்தி இருக்கும். அதனால் தான் என்னமோ இப்படம் அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதை கைப்பற்ற போகிறது.

எப்போதுமே உண்மைக்கும் உழைப்பிற்கும் கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டது. அத்துடன் இப்படத்தில் நடித்த நரேன், சதீஷ், கலையரசன் கௌதமி மற்றும் பல பிரபலங்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து படத்திற்கு இன்னும் வலுவை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.

Also read: இந்தியளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்த ஆறு படங்கள்.. ஜெய்லர் முடியாததால் லியோவுக்கு நெருக்கடி

மேலும் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று வரக்கூடிய தலைமுறைகளும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு படமாக சித்தரிக்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. அந்த வகையில் ஒரு தரமான படத்தை கொடுத்ததற்கு அங்கீகாரமாக தான் ஆஸ்கார் விருது பெறப்போகிறது.

இது ஒட்டுமொத்த பட குழுவுக்கும் கிடைத்த மிகப்பெரிய சாதனையாக தான் அனைவரும் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் இதில் நடித்த அனைவருக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை அளிக்கும் விதமாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் ஆஸ்கார் விருது பெறுவதற்கு நுழைவாயில் இருக்கிறது.

Also read: 100 கோடிக்கு வீடு, ஜெட் விமானம்.. கிறுகிறுக்க வைக்கும் செல்வ சீமாட்டி நயன்தாராவின் சொத்து மதிப்பு

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -