வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஜீவானந்தத்தை குழி தோண்டி புதைக்க பிளான் பண்ணிய குணசேகரன்.. ஞான சூனியமாக மாறிய ரேணுகாவின் கணவர்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், காசு பணம் கணவர்களின் சப்போர்ட் என்று இதுவரை இல்லாமல் இருந்தாலும் வீட்டிற்கு வாக்கப்பட்டு வந்த நான்கு பெண்களின் ஒற்றுமை தான் இந்த நாடகத்தை பார்க்க தூண்டியது. ஆனால் தற்போது இதற்கும் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்து விட்டது. அதாவது என்னதான் ஒற்றுமையாக இருந்தாலும் பணம் வந்து விட்டால் அதில் ஒரு பிளவு ஏற்படும் என்பதற்கு சிறந்த உதாரணம்.

அதாவது ஞானம் பிசினஸ் பண்ணி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ரேணுகாவின் அம்மா பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறார். இந்த சமயத்தில் நந்தினி மகள் பள்ளிக்கூடத்தில் இருந்து ஃபீஸ் கிட்ட சொல்லி போன் வந்தது. இதை நந்தினி கதிரிடம் சொல்லும் பொழுது ஞானம் நல்ல மனசாக தான் அவரிடம் இருந்த பணத்தை கொடுத்து உதவ வந்தார். ஆனால் நந்தினி யோசித்தது இனி மேலும் பணத்துக்காக யாரிடமும் கைகட்டி நிக்க வேண்டாம்.

எங்களால் முடிந்தவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார். இதை தவறாக புரிந்து கொண்ட ஞானம் ரோசப்பட்டு ஓவராக அழுது ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டார். இதை பார்த்த ரேணுகா தன் கணவர் கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டுகிறதே, தன் புருஷனை பார்த்து குணசேகரனை வைத்து ஒப்பிட்டு பேசி விட்டாரே என்ற வேதனையில் நந்தினியை கொஞ்சம் திட்டிவிட்டார்.

Also read: ரோகினிடம் சிக்கிய முத்து, குடும்பத்திற்கு தெரிய வரும் உண்மை.. ரவிக்கு மாமியார் கொடுக்கும் டார்ச்சர்

இது என்னடா அக்கா தங்கச்சிக்கு வந்த சோதனை என்பதற்கு ஏற்ப இந்த பணத்தால் இவர்களுடைய ஒற்றுமை கொஞ்சம் பிரிய ஆரம்பித்து விட்டது. நந்தினி என்ன சொல்ல வருகிறாள் என்று காது கொடுத்து கேட்க தயாராக இல்லாத ரேணுகா ஓவராக பேசிவிட்டார். இதுதான் நல்ல சான்ஸ் இவர்கள் பிரிவதற்கு என்று அந்த வீட்டில் இருக்கும் ரெண்டு சூனியக்காரி கிழவிகள் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள்.

இதுவரை குணசேகரன் எவ்வளவு திட்டினாலும் ரோசமே இல்லாத ஞானத்துக்கு இப்போதுதான் ஓவராக ரோசம் வருகிறது. இதற்கு அடுத்தபடியாக குணசேகரன் தான் இது எல்லாத்துக்கும் காரணம் என்று தர்ஷினிக்கு தெரிந்து விட்டது. அத்துடன் தன்னை கரிகாலனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்கு தான் இந்த மாதிரி வேலையை பார்க்கிறார் என்றும் புரிந்து விட்டது.

அடுத்தபடியாக குணசேகரன், தர்ஷணியை கடத்தி வைத்திருக்கும் நபருக்கு போன் பண்ணி என் மகளை தேடி கண்டிப்பாக அங்கே ஜீவானந்தம் வருவார். ஆனால் வந்ததும் நான் சொல்ற படி பண்ணு என்று ஒரு பிளானை போடுகிறார். இவர் போட்ட பிளான் படி ஜீவானந்தம் வசமாக சிக்க போகிறார். ஆக மொத்தத்தில் வழக்கம்போல் தர்ஷினி கடத்திய விஷயத்தில் இருந்து குணசேகரன் ஈசியாக தப்பித்து விடுவார்.

Also read: நிஜத்தில் குடிபோதையில் விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் மருமகள்.. ஊருக்கு தான் உபதேசம் பண்றது எல்லாம் கேப்மாரித்தனம்

- Advertisement -

Trending News