மார்க்கெட் இல்லாததால் தர மட்டமாக இறங்கிய தமன்னா.. குடும்ப குத்து விளக்காக நடித்த 5 படங்கள்

Tamannah: நடிகை தமன்னா சினிமாவில் மார்க்கெட் குறைந்ததால் ஏகத்துக்கும் கிளாமர் காட்டி பாலிவுட் வெப் சீரிஸ் களில் நடித்துக் கொண்டிருந்தார். இது பலதரப்பட்ட சினிமா ரசிகர்களையும் தமன்னா மீது நெகடிவ் விமர்சனங்களை சொல்ல வைத்தது. அதே நேரத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது முதல் தமன்னா தமிழிலும் இப்படி கிளாமரில் இறங்கி விட்டாரே என்று நெட்டிசன்கள் ஒரு பக்கம் ட்ரோல் செய்தாலும், மறுபக்கம் தமன்னாவுக்கு ரசிகர்களும் அதிகமாகி விட்டனர். இப்போது கிளாமர் ரூட்டை கையில் எடுத்திருக்கும் தமன்னா தமிழ் சினிமாவில் குடும்ப குத்து விளக்காக நடித்து ஹிட்டான 5 படங்கள் இருக்கின்றன.

கல்லூரி: தமிழில் கேடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா அடுத்து பயங்கர ஹோமிலியாக நடித்த திரைப்படம் தான் கல்லூரி. இந்த படத்தில் இவர் நடித்த ஷோபனா கேரக்டர் இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்தில் வளர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து படிக்கும் நகரத்தை சேர்ந்த பெண்ணாக தமன்னா இதில் நடித்திருப்பார். இந்த படம் தான் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

Also Read:விஜய்யை காலி பண்ண நெல்சன், ரஜினி போட்ட பிளான்.. சம்பந்தமில்லாமல் தமன்னா பாட்டை வெளியிட்ட காரணம்.!

கண்ணே கலைமானே: தமன்னா உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து நடித்த திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படம் சமீபத்தில் கூட பிரெஞ்சு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை குவித்தது. வங்கியில் வேலை செய்யும் பெண்ணாக வரும் தமன்னா, வித்தியாசமான நோயால் கண் பார்வையை இழந்து அதன் பின்னால் ஏற்படும் விளைவுகளை பற்றிய கதை இது. இந்த படத்தில் தமன்னா தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

கண்டேன் காதலை: நடிகர் பரத் மற்றும் தமன்னா நடிப்பில் உருவான திரைப்படம் கண்டேன் காதலை. ரொம்பவும் துறுதுறுவென இருக்கும் கிராமத்து பெண்ணாக தமன்னா இதில் கலக்கி இருப்பார். இந்த படத்திற்குப் பிறகு தமன்னா மீது கிரஷ் ஆன பல தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த படமும் இன்று வரை எல்லோருக்கும் ஃபேவரைட் திரைப்படமாக இருக்கிறது.

Also Read:அரேபிய குதிரையாக மாறி சூப்பர் ஸ்டாருடன் ஆட்டம் போட்ட தமன்னா.. ட்ரெண்டாகும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள்

வேங்கை: நடிகர் தனுஷ் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படத்தில் நடித்த கதை தான் வேங்கை. இந்த படத்தில் தமன்னா கல்லூரி மாணவியாக வரும் தமன்னா, பாவாடை தாவணி மற்றும் சுடிதார் என முழுக்க ஹோம்லி லுக்கில் நடித்திருப்பார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தர்மதுரை: சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத கேரக்டர் என்றால் அது தர்மதுரை திரைப்படத்தில் தமன்னா நடித்த சுபா என்னும் கேரக்டர் தான். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் தமன்னாவின் கெமிஸ்ட்ரி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தமன்னாவா இது என்று ஆச்சரியப்படும் வகையில் குடும்பப் பாங்கான தோற்றத்துடன் , சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார்.

Also Read: தமன்னாவை வைத்து போடும் பிள்ளையார் சுழி.. எதிர்பார்ப்பை மிரள வைக்கும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ

- Advertisement -