ரஜினிக்கு நிகரான கதாபாத்திரம் கொடுங்க இல்லன்னா நடிக்க மாட்டேன்.. அலப்பறை செய்த முன்னணி நடிகர்

பொதுவாகவே ரஜினி படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெறும். அதே மாதிரி அவர் நடித்தால் அந்த படம் அதிக நாட்கள் திரையரங்கில் ஓடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதற்காகவே இவர் படங்களில் ஏதாவது ஒரு கேரக்டர் கிடைக்குமா என்று பலரும் ஏங்கி வருகிறார்கள். அதனால் தான் இவருடைய படங்களில் இவருக்கு நண்பராகவும், வில்லனாகவும், காமெடியனாகவும் மற்றும் தங்கச்சியாகவும் பலரும் நடிப்பார்கள்.

அத்துடன் இவர் படங்களில் நடித்தால் கண்டிப்பாக அது பெரிய அளவில் பேசப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதிலும் இவருக்கு இணையான ஒரு வில்லன் கேரக்டர் என்றால் தரமான சம்பவம் ஆகத்தான் இருக்கும். அப்படி இருக்கையில் மிகப்பெரிய வெற்றி படமான சிவாஜி தி பாஸ் இதில் முதலில் வில்லன் கேரக்டருக்கு நடிகர் சத்யராஜ் அவர்களை தான் நடிக்க வைப்பதாக இருந்தது.

Also read: ஒரே பாட்டால் பணக்காரங்களாக ஆன மாதிரி காட்டிய 5 படங்கள்.. அதிக அளவில் மோட்டிவேஷன் கொடுத்த ரஜினி

இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே மிஸ்டர் பாரத் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சத்யராஜ் நடித்தால் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் என்பதற்காக சிவாஜி படத்தின் இயக்குனர் அவரிடம் இந்த கதையை கூறி நீங்கள் வில்லன் கேரக்டரில் நடிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு உடனே சத்யராஜ், ரஜினிக்கு நிகரான ஒரு கேரக்டர் நடிக்க கூடாதா எப்பொழுதும் ஒரு வில்லன் கேரக்டரில் தான் நடிக்கணுமா என்று ஆவேசமாக இயக்குனரிடம் வாக்குவாதத்திற்கு போய்விட்டார்.

ஆனால் இயக்குனர், இல்லை இந்த கேரக்டர் கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்படும் உங்களுக்கு நன்றாகவே அமையும் என்று கூறியிருக்கிறார். அதற்கு சத்யராஜ் அப்படி என்றால் இந்த படத்தில் நான் கேட்கிற சம்பளத்தை தான் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று ஓவர் அலப்பறையை கூட்டி இருக்கிறார். அத்துடன் இவர் சொன்னதை பார்த்தால் ரஜினி மேல் இருந்த பொறாமையின் காரணமாகத்தான் இப்படி பேசி இருக்கிறார்.

Also read: அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த ரஜினியின் 6 படங்கள்.. இத்தனை நாட்களா என வாயை பிளக்க வைத்த சந்திரமுகி

நம்முடன் வளர்ந்து வந்த நடிகர் நம்மளையும் தாண்டி இப்பொழுது பெரிய சூப்பர் ஸ்டார் ஆகி இருக்கிறார் என்ற பொறாமை தான் சத்யராஜ் இடம் அப்பட்டமாக தெரிந்தது. பின்பு சிவாஜி படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ரஜினி அவர்களுடன் இணைந்து பேசிய போது ரஜினி, இந்த கேரக்டரில் நடிப்பதற்கு அவருக்கு விருப்பமில்லை அவரே தொந்தரவு பண்ண வேண்டாம்.

அதனால் தான் அதிகமாக சம்பளமும் கேட்டிருக்கிறார். இதை இப்படியே விட்டு விடுங்கள் இதற்கு பதிலாக வேற ஒரு நடிகரை தேர்வு செய்யுங்கள் என்று கூறிவிட்டார். அதன் பின் இந்த கேரக்டருக்கு தெலுங்கு நடிகர் சுமன் சரியாக இருக்கும் என்று முடிவு பண்ணி அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள். இவரும் இந்த கேரக்டரை மிகவும் சரியாக நடித்து ரஜினிக்கு இணையான ஒரு வில்லன் என்ற பெயரையும் வாங்கி இருக்கிறார்.

Also read: விக் வைத்து ஹீரோ இமேஜை காப்பாற்றும் 8 தமிழ் நடிகர்கள்.. அட என்னடா இது, அப்பாவும், மகனும் ஒரே லிஸ்ட்ல இருக்காங்க!

Next Story

- Advertisement -