அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த ரஜினியின் 6 படங்கள்.. இத்தனை நாட்களா என வாயை பிளக்க வைத்த சந்திரமுகி

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் தனது நடிப்புத் திறமையை, வெளிப்படுத்தி வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது. அப்படியாக 100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர் ஸ்டாரின் 6 படங்களை இங்கு காணலாம்.

அருணாச்சலம்: சுந்தர் சி இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அருணாச்சலம். இதில் ரஜினிகாந்த் உடன் சௌந்தர்யா, ரம்பா, மனோரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அதிலும் இப்படத்தில் ரஜினிகாந்த் அப்பாவின் நிபந்தனையை சரியான விதத்தில் கையாளும் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி இருப்பார். இந்தப் படம் திரையரங்கில் 175 நாட்கள் வரை ஓடி மாபெரும் ஹிட் அடித்தது. 

Also Read: பாண்டியராஜிடம் மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்.. பல வருடம் கழித்து உண்மையை சொன்ன நடிகர்

படிக்காதவன்: ராஜசேகர் இயக்கத்தின் 1985 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படிக்காதவன். இதில் ரஜினிகாந்த் உடன்  சிவாஜி கணேசன், அம்பிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அதிலும் இப்படம் அண்ணன் தம்பியின் பாசப்பிணைப்பினை காட்டும் கதையினை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் ஆகும். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 210 நாட்கள் வரை ஓடி சாதனை படைத்தது. 

பில்லா: ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. இதில் ரஜினிகாந்த் உடன் ஸ்ரீ பிரியா, பாலாஜி, தேங்காய் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில்  ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரிகளையே சுத்தலில் விடும் கடத்தல்காரர் ஆக  நடித்து அசத்தியிருப்பார். இப்படம் திரையரங்குகளில் 260 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Also Read: சொன்ன வார்த்தையை காப்பாற்றிய ரஜினி.. சூப்பர் ஸ்டார் என நிரூபித்த தருணம்

படையப்பா: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா. இதில் ரஜினிகாந்த் உடன் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில்  ரஜினிகாந்த் படையப்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். அதிலும் சொத்துக்களை எல்லாம் இழந்து மீண்டும் தனது கடின உழைப்பின் மூலம் எவ்வாறு முன்னேறுகிறார் என்பதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. மேலும் இப்படம் திரையரங்குகளில் 275 நாட்கள் வரை ஓடி  மாபெரும் சாதனை படைத்தது.

பாட்ஷா: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாட்ஷா. இதில் ரஜினிகாந்த் உடன் நக்மா ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். மேலும் ரகுவரன், சரண்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் ரஜினிகாந்த் மும்பை தாதாவாக இருந்து பின்னர் ஆட்டோ டிரைவராக மாணிக்கம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசதி இருப்பார். மேலும் இப்படத்தில் வரும் அனைத்து டயலாக்குகளும் இன்றுவரையிலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் 368 நாட்கள் வரை ஓடி பட்டையை கிளப்பியது. 

சந்திரமுகி: பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இதில் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் ரஜினிகாந்த் மனநல மருத்துவராக தனது உயிர் நண்பனுக்காக தனது உயிரையே பணயம் வைக்கும் சரவணன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். மேலும் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து திரையரங்குகளில் 890 நாட்கள் வரை ஓடி அனைவரையும் வாயை பிளக்க வைத்தது என்றே சொல்லலாம்.

Also Read: சிவாஜி ராவை சூப்பர் ஸ்டாராக்கிய முதல் காதல்.. திருமணத்திற்கு முன் ஏற்பட்ட மறக்க முடியாத லவ் ஸ்டோரி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்