என்னது ரெட்டை வேடமா.? சஸ்பென்சை உடைக்க அடுத்தடுத்து வர உள்ள 5 விடாமுயற்சி அப்டேட்டுகள்

Hot updates for Ajiths Vidaamuyarchi movie: சென்ற ஆண்டு துணியுடன் வந்த அஜித் அவர்கள் அதன் வெற்றிக்கு பின் சமூக கருத்துக்களை எடுத்துச் சொல்லும் ஆக்சன் படங்களை நடிக்க திட்டமிட்டார். இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் கதைக்கு ஒப்பந்தமானார்.

வாரிசு, துணிவு என இரு பெரும் ஆளுமைகளின் படங்கள் கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி வசூலில் வெற்றி கண்டது பின் விஜய் அவர்கள் லியோ படத்தில் கமிட் ஆகி சுடச்சுட அப்டேட் கொடுத்து கடந்த ஆண்டு இறுதியில் லியோ ரிலீஸ் ஆகியது. வசூலில் சாதனை படைத்த போதும் விமர்சன ரீதியாக கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என இயக்குனர் லோகேஷ் கனகராஜை எண்ண வைத்தது லியோ.

இதற்கான காரணம் லியோ படத்தின் அப்டேட் தான். அப்டேட் கொடுத்து விட்டோம் என்ற ஒரு காரணத்திற்காகவே அவசர அவசரமாக படத்தை முடித்து லாஜிக்கல்லா நிறைய தப்பு செய்திருந்தார் லோகேஷ்.  இதனால் அஜித் அவர்கள் தனது படம் விடா முயற்சி பற்றிய செய்தி  ரசிகர்களுக்கு தவறான எதிர்பார்ப்பை கிளப்ப கூடாது என்றும் இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்றும் ப்ளான் போட்டு விடா முயற்சி பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் கசியாமல் ரகசியமாக வைத்து வருகிறார் அஜித்.

Also read: விளம்பரம் பிடிக்காத அஜித் தினமும் ஒரு போட்டோ வெளியிடுவது ஏன் தெரியுமா.?

பட குழு சென்னைக்கும் அஜர்பைஜானுக்கும் பறந்து பறந்து சூட்டிங் சென்றது மட்டுமே தெரிய வந்ததை தவிர படத்திற்கான கதை அஜித்தின் தோற்றம் என எந்த ஒரு  அப்டேட்டும் வெளியிடப்படாமல் ரகசியமாகவே இருந்தது. லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிப்பில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் தற்போதைய தகவலின்படி வேதாளம் படத்தில் வந்த ஆலுமா டோலுமா மாதிரி பன்னாட்டு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இப்படத்தில் 5  சாங்ஸ்  போடப்பட்டுள்ளதாம்.

சுப்ரீம் சுந்தரின் ஆக்‌ஷன் காட்சிகள், பிரத்தியேகமாக எடுக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே சேஸிங்குலாம் தல அஜித்துக்கு சொல்லவா வேணும்? விடாமுயற்சியில் வேகமான ஆக்‌ஷன் மற்றும் ஹைடெக் சேஸிங்குடன் படத்தின் சண்டை காட்சிகள் ஹைலைட்டாக வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

கூடுதல் தகவலாக அஜித் இரு வேறு தோற்றத்தில் தோன்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இது போன்ற தகவல்களால் படத்தின் ஹைப்பை அதிகரிக்கும் வண்ணம் பிப்ரவரி முதல் வாரத்தில் அஜித்தின் விடாமுயற்சி பஸ்ட் லுக் வெளியிடப்பட்டு தல ரசிகர்களை குஷிபடுத்த உள்ளது. இந்த அப்டேட்ஸ் பார்த்தா யாரும் தலப்பக்கம் இல்ல! தல ரசிகர்கள் பக்கம் கூட நெருங்க முடியாது போல இருக்கே!

ஏற்கனவே வெளிநாட்டு படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு வந்துள்ளனர் விடாமுயற்சி பட குழுவினர் எஞ்சிய சூட்டிங் ஹைதராபாத்தில் பிப்ரவரி இறுதிக்குள் முடித்துவிட்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளது லைக்கா நிறுவனம்.  படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை  நெட்பிளிக்ஸ் 150 கோடியென அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது என்பது கூடுதல் தகவல்.

Also read: AK 63-இல் நடிக்க போட்டியிடும் 3 முக்கிய வில்லன்கள்.. அஜித்தின் டார்லிங்க்கு அதிக வாய்ப்பு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்