வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அவள ஒழிச்சு கட்டாம விடமாட்டேன்.. மாமி நடிகையின் மார்க்கெட்டை க்ளோஸ் செய்ய நடக்கும் சதி

ஹீரோக்கள் தான் யார் நம்பர் ஒன் என்ற போட்டியில் இருக்கிறார்கள் என்று பார்த்தால் நடிகைகளும் தரலோக்கலாக இறங்கி சண்டை போட்டுக் கொள்கின்றனர். அதிலும் முன்னணி இடத்தில் இருக்கும் ஹீரோயின் ஒருவர் போட்டி நடிகையை ஒழித்துக் கட்ட செய்த வேலை தான் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

நடிகைகளை பொருத்தவரை ஒரு காலத்திற்குப் பிறகு மார்க்கெட் படுத்து விடும். ஆனால் இந்த மாமி நடிகைக்கோ இப்போது வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து கொண்டிருக்கிறது. அதிலும் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களின் படங்களில் அம்மணி தான் ஹீரோயின்.

Also read: வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் போவேன்.. குடும்ப குத்து விளக்கு நடிகையின் அட்ஜஸ்ட்மென்ட் பாலிசி

இதனால் கடுப்பான போட்டி நடிகை மாமியை பற்றி இல்லாத கட்டுக்கதை எல்லாம் சோசியல் மீடியாவில் பரப்பிக் கொண்டிருக்கிறாராம். இதற்கென்று தனியாக ஒரு ஐடியை உருவாக்கி நடிகையின் பெயரை டேமேஜ் செய்து வரும் விஷயம்தான் இப்போது அதிர்ச்சி விலகாத நிலையில் பேசப்பட்டு வருகிறது.

இது மாமி நடிகையின் காதுக்கும் சென்றிருக்கிறது. உடனே கடுப்பான அவர் இனிமேல் அவ என்கிட்ட இந்த மாதிரி வேலையை வச்சுக்கிட்டா அப்புறம் நடக்கிறதே வேற என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆவேசத்தோடு பேசி வருகிறாராம்.

Also read: காருக்குள்ளேயே போட்ட அந்தரங்க ஆட்டம்.. கொத்தாக மாட்டிய சீரியல் ஜோடி

பிரச்சனை வேறு பக்கம் திரும்புவதை உணர்ந்து கொண்ட அந்த ஹீரோயின் இப்போது நல்ல பிள்ளையாக மாமி விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கி விட்டாராம். இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் இந்த விஷயம் மீடியாவில் பூதாகரமாக வெடித்து இருவருக்கும் குடுமிப்பிடி சண்டை ஆரம்பிக்கும் என கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.

- Advertisement -

Trending News