உங்க பருப்பு இங்க வேகாது.. விவேக், வடிவேலு ரெண்டு பேருக்கும் தண்ணி காட்டிய நடிகர்

90 கால கட்டத்தில் விவேக் மற்றும் வடிவேலு இருவரும் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்தார்கள். இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவர்களை தான் மாறி மாறி தங்கள் படங்களில் புக் செய்து வந்தனர். ஹீரோக்களுடன் இணைந்து இவர்கள் செய்யும் காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இவர்கள் இருவரும் சில படங்களில் ஒன்றாக நடித்தாலும் தங்களுக்கான தனி அந்தஸ்து கிடைத்தவுடன் பிரிந்து விட்டனர். தங்களுக்கு என்று ஒரு நடிகர் பட்டாளம் மற்றும் அசிஸ்டன்ட் போன்றவர்களை வைத்துக் கொண்டார்கள். நீ வடிவேலு ஆளு, நீ விவேக் ஆளு என தனித்தனியாக குரூப் இருந்தது.

Also Read : முருங்க மரத்திலேயே குடி கொண்ட வேதாளம்.. வடிவேலுவால் செம கடுப்பில் இருக்கும் சந்திரமுகி-2 படக்குழு

வடிவேலு குரூப்பில் உள்ளவர்கள் அவரது படத்தில் மட்டும் தான் நடிப்பார்கள். அதேபோல் தான் விவேக் குரூப்பில் உள்ள பிரபலங்கள் அவரது படத்தில் மட்டுமே நடித்து வந்தார்கள். ஆனால் இவர்கள் இருவருக்குமே வேறு ஒரு காமெடி நடிகர் தண்ணி காட்டி இருந்தார்.

அதாவது வடிவேலு மற்றும் விவேக் என இரண்டு காமெடி நடிகர்கள் படங்களிலும் அவர் பட்டையை கிளப்பி உள்ளார். அந்த வகையில் இந்த காமெடி ஜாம்பவான்கள் இருவருமே ஒதுக்கி வைக்காத ஆள் என்றால் அது மயில்சாமி மட்டும்தான். அவர் இருந்தவரை சினிமாவில் உள்ள அனைத்து பிரபலங்களிடமும் நட்பாக பழகி வந்தார்.

Also Read : விவேக், மயில்சாமி சேர்ந்து அடித்த லூட்டிகள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த 5 படங்கள்

மேலும் வடிவேலுவிடம் இருக்கும்போது விவேக் பற்றியோ, விவேக்கிடம் இருக்கும்போது வடிவேலு பற்றியோ எதுவுமே பேச மாட்டாராம். அதனால் தான் வடிவேலு மற்றும் விவேக் இருவருக்குமே நம்பிக்கை உரிய நபராக மயில்சாமி இருந்துள்ளார். இவர்கள் மட்டுமின்றி எல்லோரிடமுமே அதேபோல் தான் நடந்து கொள்வாராம்.

அதனால் தான் மயில்சாமிக்கு சினிமா துறையை பொறுத்தவரையில் ஒரு எதிரி கூட இல்லை என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு விஷயமும் அடுத்தவர் மனது புண்படக் கூடாது என்பதற்காக மிகவும் பார்த்து பார்த்து நடந்து கொள்ளக் கூடியவர். மேலும் அவரது இறப்பால் தற்போது சினிமா உலகமே கலையற்ற உள்ளது.

Also Read : வடிவேலு உதறி தள்ளிய படத்தில் ஹீரோவான விஜய்.. தளபதியின் கேரியரையே தலைகீழ புரட்டிப் போட்ட படம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை