முருங்க மரத்திலேயே குடி கொண்ட வேதாளம்.. வடிவேலுவால் செம கடுப்பில் இருக்கும் சந்திரமுகி-2 படக்குழு

நடிகர் வடிவேலு ஒரு காலகட்டத்தில் கோலிவுட் நகைச்சுவை உலகின் கிங் ஆக இருந்தார். ஒரு சில காரணங்களால் பல வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் சினிமாவுக்குள் வடிவேலு காலடி வைத்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் நடிகர் வடிவேலுவுக்கு தான் திடீரென்று ஓவராக தலைக்கணம் வந்திருக்கிறது என்றே சொல்லலாம் . சினிமாவில் இல்லாத காலத்திலும் ரசிகர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடியதால் தானாகவே இந்த தலைக்கணம் அவருடன் ஒட்டிக்கொண்டு விட்டது. இதனால் ரீ எண்ட்ரியில் கால் வைத்திருக்கும் வடிவேலு கொஞ்சம் ஓவராகத்தான் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read: என்னுடைய வளர்ச்சிக்கு முக்கியமான காரணம்.. 35 வருட ரகசியத்தை உடைத்த வடிவேலு

இவருடைய ஓவர் ஆட்டத்தால் ஏற்கனவே நாய் சேகர் ரிட்டன்ஸ் மண்ணை கவ்வி இருக்கிறது. இதை கொஞ்சம் கூட யோசிக்காமல் வடிவேலு சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிலும் கொஞ்சம் ஓவர் அலப்பறையை கூட்டி வருகிறாராம். நாளுக்கு நாள் இவருடைய ஆட்டம் எல்லை மீறி போய் கொண்டிருக்கிறதாம்.

இதனால் வடிவேலுவின் மீது புகார்களும் எழுந்து வருகின்றன. காலையில் ஒன்பது மணிக்கு ஷூட்டிங் என்று சொன்னால் பத்து மணிக்கு வருகிறேன், பதினோரு மணிக்கு வருகிறேன், பதினொன்றரைக்கு தான் வருவேன் என்று கூறுகிறாராம்.

Also Read: 65 வயசு, உருவ கேலி வடிவேலுவின் படம் இனி ஓட வாய்ப்பு இல்ல.. நாய் சேகர் பிளாப் என முன்பே கணித்த பிரபலம்

வடிவேலுவின் இந்தப் பழக்கத்தால் சந்திரமுகி பார்ட் 2 படத்தின் மற்ற ஆர்டிஸ்ட்கள் எல்லோரும் இவருக்காக தேவுடு காக்கின்றனராம் . ஏதாவது எமர்ஜென்சி என்று கூப்பிட்டால் கூட வடிவேலுவை பிடிக்க முடியவில்லையாம். காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை வடிவேலுவின் போன் ஸ்விட்ச் ஆஃப்பில் தான் இருக்கிறதாம்.

இதனால் எல்லோரும் பழைய வேதாளம் இன்னும் முருங்கை மரத்தில் தான் இருக்கிறது என்று வடிவேலுவை பற்றி விமர்சித்து வருகிறார்கள். என்னதான் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களாக இருந்தாலும் கரெக்டாக வேலை செய்யாவிட்டால் ரசிகர்கள் ஓரங்கட்டி விடுவார்கள். இது புரியாமல் வடிவேலு தலைக்கணத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார்.

Also Read: வடிவேலு, சிங்கமுத்து இடையில் வெடித்த பிரச்சினை.. அப்படியே அலேக்காக தூக்கிய வருமானவரி துறையினர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்