சூர்யா, கார்த்தியை குட்டிச்சுவராக ஆக்கியதே இவர்தான்.. ஆதங்கத்தில் கண்டபடி திட்டிய சிவக்குமார்

Surya and Karthi: பிள்ளைகள் செய்த தவறு குடும்பத்தின் மீது தான் சுற்றி வரும் என்று சொல்வார்கள். அது தற்போது சிவக்குமார் விஷயத்தில் சரியாக அமைந்துவிட்டது. அதாவது ஞானவேல் ராஜா, சிவக்குமாருடைய நெருங்கிய சொந்தக்காரர். கிட்டத்தட்ட சூர்யா கார்த்திக்கு அண்ணன் மாதிரி. அதனாலேயே இவருடைய வீட்டிலேயே ரொம்ப நாள் ஞானவேல் ராஜா இருந்திருக்கிறார்.

வீட்டில் இருக்கும்பொழுது சும்மா இல்லாமல் சூர்யா ஜோதிகாவின் காதலுக்கு தூதுவராக இருந்தவரும் இவர்தான். அந்த நேரத்தில் இவர்களுடைய காதலை வீட்டிற்கு மறைத்து சூர்யாவை உசுப்பேத்தி விட்டது ஞானவேல் ராஜா. அதோடு இல்லாமல் கார்த்தியையும் ஒரு வழி பண்ணி இருக்கிறார். அதாவது தமன்னாவுடன் நடிக்கும் போது உங்க கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.

நீங்கள் தொடர்ந்து வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தால் சூப்பராக இருக்கும் என்று கார்த்தியை உசுப்பேத்தி விட்டதும் ஞானவேல் ராஜா தான். இவர் சொல்வதைக் கேட்டு தமன்னாவை லவ் பண்ணி கிசுகிசுவில் சிக்கிக்கொண்டார். இதை தெரிந்து கொண்ட சிவக்குமார் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணி விட்டாய். இதுக்கு மேலயும் உன்னை நான் வீட்டில் வைத்தால் என் குடும்பத்தையே கெடுத்து விடுவாய்.

Also read: அடிமடியில் கை வைத்த வாரிசுகள்.. எவ்வளவு சொல்லியும் சிவக்குமார் பேச்சைக் கேட்காத மாபியா

என்னால் தான் சினிமாவிற்கு வந்தாய், அப்படி இருக்கும் பொழுது எனக்கே துரோகம் செய்கிறாயா என்று வீட்டை விட்டு ஞானவேல் ராஜாவை சிவகுமார் அனுப்பிவிட்டார். அதன் பிறகு சிவக்குமார் குடும்பத்திலிருந்து ஒரு அடி தூரத்திலேயே ஞானவேல் ராஜா இருந்திருக்கிறார். இதையெல்லாம் தாண்டி மறுபடியும் சூர்யா கார்த்திக்கு இவரால் ஒரு அவப்பெயர் வந்திருக்கிறது.

அதாவது அமீரை வாய்க்கு வந்தபடி பேசி அவதூறாக பலி சுமத்தியதால் பல பிரபலங்கள் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக திரும்பி விட்டார்கள். அதோடு விடாமல் சிவக்குமார் குடும்பத்தையும் இழுத்து இதற்கெல்லாம் பின்னணியில் இவர்கள்தான் இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு பிரச்சனை பூகம்பமாக வெடித்துக் கொண்டு வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சிவக்குமார் முழித்துக் கொண்டு வருகிறார்.

அதனால் சிவக்குமார் முடிந்த அளவிற்கு இந்த பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் எடுத்த கெட்ட பெயரில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று ஞானவேல் ராஜாவை அனைவரது முன்னாடியும் மன்னிப்பு கேட்கும் படி செய்து விட்டார். இருந்தாலும் கெட்ட பெயர் வந்ததால் ஆதங்கத்தில் ஞானவேல் ராஜாவை கண்டபடி திட்டி வருகிறார்.

Also read: சிவக்குமார் வில்லனாக நடித்த ஒரே படம்.. கமல் கைவிட்ட மோசமான கதாபாத்திரம்