வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜய்யை ஒரு ஐட்டம் ஹீரோவாக காட்டியதுக்கு இவர் தான் முக்கிய காரணம்.. முகம் சுளிக்க வைத்த 5 கவர்ச்சி ஆட்டம்

Actor Vijay: விஜய் இப்போது பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டம் தான். இப்படி புகழ்பெற்ற ஹீரோவாக இருக்கும் இவரை சில படங்கள் ஐட்டம் ஹீரோவாகவும் காட்டி இருக்கிறது. அதனாலேயே குடும்ப ஆடியன்ஸ் இவருடைய படங்களை தவிர்த்த கதையும் உண்டு.

இதற்கு முக்கிய காரணம் அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தான். ஆரம்பத்தில் தன் அப்பாவின் படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜய் அதில் எல்லாம் ஹீரோயின் உடன் பயங்கர கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பார். அதிலும் சங்கவியுடன் இவர் நடித்த படங்களில் எல்லாம் ஏதாவது ஒரு கிளுகிளுப்பான பாடல் கட்டாயம் இடம் பெற்று விடும். அப்படி இவர் கவர்ச்சி ஆட்டம் போட்ட ஐந்து பாடல்களைப் பற்றி இங்கு காண்போம்.

Also read: இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவர இருக்கும் 4 படங்கள்.. திரையரங்குகளில் சோடைப் போன பாட்ஷா

ரசிகன்: இப்படத்தில் இடம்பெறும் சில்லென என்ற பாடலை குடும்பத்தோடு யாரும் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு சங்கவி அரைகுறை உடையில் விஜய்யுடன் இணைந்து ஆடியிருப்பார். குளியலறை செட் ஆப்பில் இருக்கும் இடத்தில் இவர்கள் இருவரும் ஈரம் சொட்ட சொட்ட ஆடி இருப்பார்கள். இளைஞர்களை இப்பாடல் கவர்ந்திருந்தாலும் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் தான் இது இருந்தது.

செந்தூரப்பாண்டி: இப்படத்தில் கேப்டனுக்கு தம்பியாக விஜய் நடித்திருப்பார். அதில் இடம்பெற்றிருந்த மானே நானே நானே என்ற பாடல் பயங்கர ஹாட்டாக இருக்கும். அதில் விஜய் மற்றும் யுவராணி இருவரும் ரொம்பவும் நெருக்கமாக ஆடி இருப்பார்கள். அதிலும் ஹீரோயின் அணிந்திருந்த ஆடை ரொம்பவே அபாயகரமாக இருக்கும்.

Also read: நடிப்பு அரக்கனாய் மிரட்டிக் கொண்டிருக்கும் ஏஜென்ட் அமர்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 6 படங்கள்

விஷ்ணு: இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சங்கவி நடித்திருப்பார். இதில் ஐட்டம் டான்ஸ், லிப் லாக் என ஏகப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதிலும் ஹம்மா ஹம்மா என்ற பாடலில் விஜய், சங்கவி இருவரும் படு நெருக்கமாக ஆட்டம் போட்டிருப்பார்கள். அதன் காரணமாகவே இப்படத்தை பார்க்க பெண்கள் தயங்கியது குறிப்பிடத்தக்கது.

கோயம்புத்தூர் மாப்பிள்ளை: இப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக சங்கவி தான் நடித்திருப்பார். ஆரம்பத்தில் சண்டைக்கோழிகள் ஆக வரும் இவர்கள் அதன் பிறகு காதலிக்க ஆரம்பிக்கும் போது ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதிலும் ஒரு தேதி பார்த்தால் என்ற பாடலில் சங்கவி பிகினி உடையிலும் விஜய்யுடன் ஆடி இருப்பார்.

Also read: எட்டு ஆண்டுகளில் தன்னோடு சேர்த்த 6 இயக்குனர்களையும் வளர்த்துவிட்ட ஜெயம் ரவி.. இந்த நல்ல மனசு யாருக்கு வரும்.!

ஒன்ஸ்மோர்: இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் வருவார். ஆனால் பெண்களிடம் ஜாலியாக பழகும் ஒருவராக வரும் விஜய் ஊட்டி மல பியூட்டி என்ற பாடலில் மூன்று பெண்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருப்பார். அதை தொடர்ந்து பூவே பூவே என்று வரும் ரொமான்ஸ் பாடலிலும் நாயகியுடன் நெருக்கம் காட்டியிருப்பார்.

இப்படி இந்த ஐந்து படங்களிலும் விஜய் ஹீரோயினுடன் ரொம்பவே நெருக்கமாக இணைந்து நடித்திருப்பார். அதிலும் இந்தப் பாடல் காட்சிகளை எல்லாம் இப்போது அவர் பார்த்தால் நிச்சயம் கூச்சப்பட்டு கண்ணை மூடி கொள்வார். இது போன்ற படங்களால் தான் அவர் ஒரு ஐட்டம் ஹீரோவாக முத்திரை குத்தப்பட்டார். ஆனால் எப்படியோ இந்த இமேஜில் இருந்து மீண்டு வந்த விஜய் இப்போது மாஸ் ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறார்.

Also read: டான்ஸ் மாஸ்டராக வந்து ஹீரோவாக மாறிய 5 நடிகர்கள்.. புதுசாக ஹீரோக்கு ரூட்டு விடும் சாண்டி

- Advertisement -

Trending News