டான்ஸ் மாஸ்டராக வந்து ஹீரோவாக மாறிய 5 நடிகர்கள்.. புதுசாக ஹீரோக்கு ரூட்டு விடும் சாண்டி

Dance Master Became Heroes: ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டராக சினிமாவிற்குள் நுழைந்து பல படங்களில் நடனம் வடிவமைத்து கொடுத்து பிரபலமாக இருக்கிறார்கள். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடிக்க ஆரம்பித்து ஹீரோவாகவும் அவர்களுடைய முத்திரையை பதித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.

பிரபுதேவா: இவர் சினிமாவிற்கு நடன கலைஞராக அறிமுகமாகி கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த வெற்றி விழா படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார். அதன் பின் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார். அதற்கடுத்து இந்து படத்தில் நடிகராக அறிமுகமாகி காதலன், ராசையா, மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் நிலையான ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

Also read:  நயன்தாராவின் காதலை மறக்காத பிரபுதேவா.? உங்களுக்கு உருட்டுறதுக்கு ஒரு அளவே இல்லையா

ராஜூ சுந்தரம்: இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்தில் ருக்குமணி ருக்குமணி என்ற பாடலில் நடன கலைஞராக பணியாற்றி இருக்கிறார். அதன் பின்பு ஜென்டில்மேன், காதலன் போன்ற படங்களில் கேமியோ தோற்றங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து ஜீன்ஸ், என் சுவாச காற்றே, ஐ லவ் யூ டா, உன்னாலே உன்னாலே, எங்கேயும் காதல் போன்ற படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார்.

தினேஷ் மாஸ்டர்: இவர் நடன இயக்குனராக மனதை திருடி விட்டாய் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு என்டரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பின் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் 2018 ஆம் ஆண்டு ஒரு குப்பை கதை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அடி எடுத்து வைத்திருக்கிறார்.

Also read: ஊருக்கு மட்டும் தான் உபதேசம் போல.. நம்பி வந்தவர்களை நடுத்தெருவில் நிப்பாட்டிய ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்: இவர் ஆரம்பத்தில் பிரபுதேவா உடன் சில நடனங்களை ஆடி ஜென்டில்மேன் படத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலில் பின்னணி நடன கலைஞராக பணியாற்றினார். அதன்பின் சில படங்களில் நடன காட்சிகளில் தோன்றி, அடுத்தடுத்த படங்களில் டான்ஸ் மாஸ்டர் ஆகவும் இவரை வளர்த்துக் கொண்டார். அதன் பின் நடிகராகவும் இவருடைய முத்திரையை பதித்து பல படங்களில் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார்.

சாண்டி: இவர் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் கொரியோகிராபராக பணியாற்றியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் இவர் பக்கம் திருப்பிக் கொண்டார். அதன் பின் பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து ஒன்று இரண்டு பாடல்களில் இவருடைய முகத்தை காட்டி அதற்கு நடனம் ஆடினார். அப்படிப்பட்ட இவர் தற்போது ஹீரோவாக ஆவதற்கு ரூட்டு போட்டு வருகிறார்.

Also read: ராகவா லாரன்ஸ் வலை வீசிய 4 நடிகைகள்.. வெளிப்படையாகவே டேமேஜ் செய்த ஹீரோயின்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்