டைட்டில் வின்னர் பட்டம் அவருக்கு தகுதியே கிடையாது.. முதல் முறையாக ஓப்பனாக பேசிய விக்ரமன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பகுதியை எட்டியது. எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு உள்ளது. மேலும் கடந்த சீசன்களை விட இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு சற்று அதிகமாக இருந்தது.

காரணம் கடைசி வரை யார் டைட்டில் வின்னர் பட்டத்தை அடைவார் என்ற சந்தேகம் ரசிகர்களிடம் நிலவியது. விக்ரமன் தான் பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர் ஆவார் என ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்த நிலையில் அசீம் டைட்டிலை தட்டி சென்றார். இதனால் இணையத்தில் ஒரு பிரளயமே வெடித்தது.

Also Read : பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் ராதிகா.. மோசமான வில்லியை தரையிறக்கும் முடிவில் விஜய் டிவி

இந்நிலையில் விக்ரமன் பல ஊடகங்களில் தற்போது பேட்டி கொடுத்து வருகிறார். இதில் அசீமின் வெற்றியை பற்றி பேசி உள்ளார். அதாவது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் முதலில் பெண்களுக்கு சொத்து உரிமை கொடுத்த மாநிலம். உள்ளாட்சித் தேர்தலில் முதலில் பெண்களுக்கு 50 சதவீத வாக்குரிமை கொடுத்ததும் தமிழ்நாடு தான்.

இப்படி தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வரும் சூழல் உள்ளது. இப்படி இருக்கையில் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தி இழிவுபடுத்தியவருக்கு வெற்றி கிடைப்பது ஒரு கேள்வியை தான் ஏற்படுத்தியுள்ளது. இதை யாராலும் சந்தோசமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என விக்ரமன் கூறியுள்ளார்.

Also Read : மிக மட்டமான முன் உதாரணம்.. விஜய் டிவியை விளாசிய சீசன் 6 நடிகை

ஆரம்பத்திலிருந்து அசீம் எல்லா விஷயங்களிலும் முன்கோபம் பட்டு கடுமையாகப் பேசி உள்ளார். அதிலும் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டை போட்ட ஒரே ஆள் என்றால் அது அசீம் தான். ஆனால் சின்னதிரையில் அவருக்கு உள்ள ரசிகர்கள் மற்றும் அசீமின் ஓப்பன் டைப் காரணமாக அவருக்கு ஓட்டுகள் விழுந்தது.

இதில் கிடைத்த வாக்குகள் மூலம் தான் அசீம் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றுள்ளார். இதை ரசிகர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் கடைசியாக அசீம் பெற்ற வெற்றி தொகையில் 25 லட்சத்தை ஏழை குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவுவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Also Read : அசீம் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது.. விஜய் டிவிக்கு எதிராக இணையத்தில் கொந்தளித்த கூட்டம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்