திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

எலியும் பூனையுமாய் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர்.. பட்டையை கிளப்பும் பார்க்கிங் ட்ரெய்லர்

Parking Trailer: இப்போது ஹரிஷ் கல்யாண் வளர்ந்து வரும் நடிகராக இருந்து கொண்டிருக்கிறார். சாக்லேட் பாயாக வளம் வந்து கொண்டிருந்த இவர் இப்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் என்ற படம் உருவாகி இருக்கிறது.

ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா மற்றும் இளவரசு ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் ஒன்றாம் தேதி பார்க்கிங் படம் ரிலீஸாக உள்ள நிலையில் இப்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. நடுத்தர குடும்பத்தில் இருக்கும் சாமானிய மனிதனின் கார் கனவு தான் இந்த படத்தின் கதை.

அதாவது படித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண் ஒரு வீட்டின் மாடியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அப்போது கீழ் வீட்டில் எம்எஸ் பாஸ்கர் குடியிருக்கிறார். இந்நிலையில் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஹரிஷ் கல்யாண் தனது கனவை நிறைவேற்றும் படி காரை வாங்கி விடுகிறார்.

Also Read : எம் எஸ் பாஸ்கர் மாதிரியே நடிக்கும் கின்னஸ் நடிகர்.. ரிட்டேட் ஆகியும் கமல் தூக்கிட்டு வந்த காமெடியன்

ஆனால் அதற்கான பார்க்கிங்கில் தான் பிரச்சனை தொடங்குகிறது. அதாவது ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு கீழே எம் எஸ் பாஸ்கர் இருப்பதால் அங்கு காரை நிறுத்தக்கூடாது என்ற பிரச்சனை வருகிறது. ஒரு கட்டத்தில் பிரச்சனை பூதாகரம் எடுக்க காரின் கண்ணாடியை எம்.எஸ். பாஸ்கர் கல் எடுத்து உடைத்து விடுகிறார்.

இதனால் கோபத்தில் ஹரிஷ் கல்யாண் எம்எஸ் பாஸ்கர் மீது கை வைத்து விடுகிறார். இதைத்தொடர்ந்து போலீஸ், கேஸ் என ஹரிஷ் கல்யாண் பெரும் சிக்கலை சந்திக்கிறார். இவ்வாறு எலியும், பூனையுமாக இருக்கும் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் கூட்டணி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த ட்ரெய்லர் படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News