வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

எம் எஸ் பாஸ்கர் மாதிரியே நடிக்கும் கின்னஸ் நடிகர்.. ரிட்டேட் ஆகியும் கமல் தூக்கிட்டு வந்த காமெடியன்

2 Comedians with Same Acting: சினிமாவில் ஒவ்வொரு நடிகர் நடிகைக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கும். அது பிடிப்பதால் தான் ரசிகர்கள் தங்கள் ஆதரவை கொடுக்கின்றனர். அப்படிப் பார்த்தால் திரையுலகில் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தும் இரண்டு காமெடியன்ஸ் இருக்கின்றனர்.

இந்த இரண்டு காமெடி நடிகர்களின் ஆக்டிங் ஸ்டைல் ஒரே மாதிரியாக இருக்கும். எம்எஸ் பாஸ்கர் மற்றும் பிரம்மானந்தம் இருவரும் ஒரே மாதிரியான நடிப்பை வெளிக்காட்டுவார்கள். தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழில் காற்றின் மொழி படத்தில் பிரம்மானந்தாவின் நடிப்பு நிறைய தமிழ் ஆடியன்சுக்கு பிடித்து விட்டது.

இந்தப் படத்தில் பிரம்மானந்தம் மட்டுமல்ல எம்எஸ் பாஸ்கரும் உடன் நடித்திருந்தார். அதுவும் இருவரும் ஒரே ஸ்டைலில் நடித்தனர். இதை பலரும் கண்டுபிடித்தனர். இருப்பினும் அவர்கள் தங்களது நடிப்புத் தோரணையை கொஞ்சம் கூட மாற்றிக்கொள்ளவில்லை.

இதுவரை 1200 படங்களுக்கு மேல் நடித்து, ‘அதிக படங்களில் நடித்த வாழும் நடிகர்’ என்ற கின்னஸ் ரெக்கார்ட் படைத்த பிரம்மானந்தம் 67 வயதானதால் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய ஓவர் ஆக்டிங் தான்.

போதும்டா சாமி இதுக்கு மேல நான் நடிக்கல, ரிட்டேட் ஆகிவிட்டேன் என்று பிரம்மானந்தம் சினிமா விட்டு விலகி இருக்கிறார். இருப்பினும் அவருடைய ஓவர் ஆக்டிங் தான் அவருடைய பிளஸ் பாயிண்ட் என்று கமல் தன்னுடைய சபாஷ் நாயுடு என்ற படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த படத்திற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

சபாஷ் நாயுடு திரைப்படம் ஒரு நகைச்சுவை படமாக தமிழ், தெலுங்கு போன்ற இரண்டு மொழிகளில் உலக நாயகனே எழுதி இயக்கி தயாரிக்க திட்டமிட்ட படம். இந்த படம் மட்டும் நிச்சயம் வெளிவந்தால் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிப்பார்கள். ஏனென்றால் கமல் பிரம்மானந்தாவின் காம்போ பக்காவாக ஒர்க் அவுட் ஆகும்.

- Advertisement -

Trending News