ஒரே படத்தால் கேள்விக்குறியான ஹரியின் கேரியர்.. ஆரம்பித்த ப்ராஜெக்டை நிறுத்திய பெரிய தலக்கட்டு

Hari’s carrier in Question Mark: கமர்சியல் படங்கள் எடுப்பதில் “கிங்”என்று ஹரியை சொல்லலாம். ஆனால் ரசிகர்களுக்கு தீனி போடும் ஹரி, சிறிது காலமாக சுவாரஸ்யம் இல்லாத படங்களை கொடுத்து வருகிறார். கதைகளையும் காட்சிகளையும், மிக வேகமாக நகர்த்தும் ஹரி தற்சமயம் சோடை போய் வருகிறார்.

ஒரே மாதிரியான கதைகளை, கிட்டத்தட்ட பத்து வருடமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஹரி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று எளிதாக கணித்து விடும் மக்கள், இவர் படத்திற்கு ஆர்வம் காட்டுவதை நிறுத்தி வருகின்றனர். அதனால் ஹரி படத்தின் வியாபாரம் சமீபகாலமாக டல்லடித்து வருகிறது

ஹரி கடந்த 10 வருடங்களாக பூஜை, சிங்கம் 3, சாமி ஸ்கொயர், யானை, ரத்தினம் போன்ற ஒரே மாதிரியான கதைகளை கொடுத்து ஏமாற்றி வருகிறார். படத்தில் காட்சிகளுக்கு இடையே இருக்கும் வேகத்தை விட, கதை ஆமை வேகத்தில் தான் நகன்று செல்கிறது. கமர்சியலாக படம் எடுத்தாலும் சிங்கம் முதல் பாகத்தை தவிர இன்றுவரை சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் ஹிட் ஆகவில்லை.

ஆரம்பித்த ப்ராஜெக்டை நிறுத்திய பெரிய தலக்கட்டு

கடைசியாக ஹரி இயக்கிய படம் ரத்தினம் . இந்த படத்திற்கு பின், ஹரி சத்யஜோதி தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணுவதாக பேசப்பட்டது. அந்த நிறுவனமே ஹரிக்கு வலிய வந்து இந்த வாய்ப்பை வழங்கியது. ஹரி அதனை பெரிய பட்ஜெட் படமாக எடுக்க திட்டமிட்டு இருந்தார்

சமீபத்தில் ரத்தினம் படம் ஓடாததால் ஹரிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஏற்கனவே கமிட்டான சத்தியஜோதி நிறுவனம் இப்பொழுது ஹரியிடம் பேசுவது கூட இல்லையாம். அப்படியே அந்த படத்தை ட்ராப் செய்து விட்டார்களாம். தற்சமயம் ஹரி கைவசம் எந்த படங்களும் இல்லை.

Next Story

- Advertisement -