புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

ஹரி இயக்கத்தில் அதிரடியான ராபின்ஹூட் கதையில் அஜித்.. இன்னும் ஒரு டிஸ்கஷன் நடந்தா போதும்

Actor Ajith : இயக்குனர் ஹரி கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் நடுவில் சினிமாவில் மிகப்பெரிய பிரேக் எடுத்து விட்டார். அதன் பிறகு சூர்யாவுக்கு சிங்கம் என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்தார்.

இந்நிலையில் கடைசியாக ஹரி இயக்கத்தில் வெளியான யானை படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இப்போது விஷால் நடிப்பில் ரத்னம் என்ற படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

ராபின்ஹூட் கதையில் அஜித்

அஜித்தின் அமர்க்களம் படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக ஹரி பணியாற்றி இருக்கிறார். இதனால் அஜித் மற்றும் ஹரி இடையே சமூகமான உறவு தற்போது வரை இருந்து வருகிறதாம்.

இந்நிலையில் அஜித்துக்காக ஒரு பக்கம் ஆக்சன் கதையை ஹரி தயார் செய்து வைத்திருக்கிறாராம். அதாவது இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை இருக்கும் போது தனது அடையாளத்தை மறைத்து ஃபேஸ் மக்களுக்காக போராடுகிறார்.

அதாவது பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராபின்ஹுட் செல்வந்தர்களின் செல்வங்களை களவாடி ஏழைகளுக்கு பகிர்ந்து அளித்து வாழ்வு தந்தார். அது போன்ற கதையில் அஜித்தை நடிக்க வைக்க ஹரிக்கு எண்ணம் இருக்கிறது.

இதுகுறித்து ஏற்கனவே அஜித்திடம் இரண்டு கதையை ஹரி கூறியுள்ளார். இன்னும் ஒரு முறை டிஸ்கஷன் நடந்தால் கண்டிப்பாக படம் ஓகே ஆகிவிடுமாம். இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு ஹரியுடன் கூட்டணி போட அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News