தலையில் காயம், கையில் விலங்கு.. மிரட்டும் ஹன்சிகாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்த நாயகி ஹன்சிகா மோத்வானி. தற்போது கேட்பாரற்று கிடக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, எங்கேயும் காதல் போன்ற படங்களின் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி அறிமுகம் ஆன புதிதிலேயே தனது கொழுக் மொழுக் தேகத்தினால் ரசிகர்களை கட்டிப் போட்டார்.

அதன் பிறகு தொடர்ந்து முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா என ஜோடி போட தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக மாறி வந்தார். தெலுங்கிலும் இவரது மார்க்கெட் ஏறுமுகம்தான். இடையில் சிம்புவுடன் காதல் கிசுகிசு வேறு ஏற்பட்டது.

ஆனால் சமீபகாலமாக ஹன்சிகாவை கண்டுகொள்ள ஆளில்லாமல் தவித்து வருகிறார். இளம் நடிகர்களுடன் ஜோடி போடுவதற்காக தனது உடம்பை பாதியாக குறைத்ததால் வந்த விளைவு என்கிறார்கள் ரசிகர்கள். ஹன்சிகாவிடம் அதிகமாக ரசிகர்கள் விரும்பியது அந்த குண்டான உடம்பை தான்.

ஆனால் உடல் எடையை குறைத்த பிறகு எலும்பும் தோலுமாய் நோய் வந்த மாதிரி ஆகிவிட்டார் நம்ம ஹன்சிகா. அதன் பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்தால் தான் தனக்கு பட வாய்ப்பு வரவில்லை என்பதை உணர்ந்த ஹன்சிகா தற்போது பழைய நிலைமைக்கு வர கொஞ்சம் கொஞ்சமாக வெயிட் போட்டு வருகிறாராம்.

அதேபோல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் அடுத்ததாக ஹன்சிகா நடிக்கும் ஒன் நாட் 5 மினிட்ஸ் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

hansika-next-movie
hansika-next-movie
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்