வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

குணசேகரனின் உச்சி குளிர வைத்த முட்டாள் பீஸ்.. எக்ஸ்பிரஸ் வேகத்தில் தர்ஷினியை காப்பாற்றிய ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், இத்தனை நாளாக சூடு சொரணை இல்லாமல் தத்தி மாதிரி இருந்த ஞானத்துக்கு இப்பொழுதான் ரோசம் புதுசாக வந்திருக்கிறது. அதற்கேற்ற மாதிரி நந்தினி சொன்ன சாதாரண விஷயத்தை பெருசாக்கி அதை பொண்டாட்டி இடம் வத்தி வைத்து நீலி கண்ணீர் வடித்து விட்டார். இதை பார்த்த ரேணுகா நீ எப்படி என் புருஷனை பார்த்து இன்னொரு குணசேகரன் என்று சொன்ன என கேட்கிறார்.

நந்தினி என்ன சொல்ல வருகிறார் என்று பேசக்கூட விடாமல் இஷ்டத்துக்கு ரேணுகா ஓவராக பேசி விட்டார். போதாக்குறைக்கு நந்தினி வழக்கமா பேசுவது போல் ஞானம் மாமா பொம்பள மாதிரி மனசுல வச்சு இப்படி உங்ககிட்ட சொல்லுவாங்க நான் எதிர்பார்க்கல என சொன்னதும் ரேணுகா அவ்வளவுதான் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டார்.

இப்படி இரண்டு பேரும் மாத்தி மாத்தி குழாயடி சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். இதை பார்க்கும் பொழுது கதிர், ஞானமும் திருந்திருக்கவே வேண்டாம் என்பது போல் இருந்தது. அத்துடன் இவர்கள் போடும் சண்டையில் குதூகலமாக குளிர் காய்கிறார் தாய் கிழவிகள் இரண்டு. இந்த நேரத்தில் குணசேகரன் வந்து பார்த்து குதூகலம் ஆகி விடுகிறார்.

Also read: முத்துவின் அப்பாவால் ரோகிணியின் முகத்திரை கிழியும் நேரம் வந்தாச்சு.. விஜயா வைக்க போகும் செக்

இதையெல்லாம் பார்க்கும் பொழுது குணசேகரன் மனசுல இப்பொழுதுதான் பெரிய பாரமே இறங்கிவிட்டது என்பதற்கு ஏற்ப உச்சி குளிர்ந்து போய்விட்டார். இதுவரை குணசேகரன் சொன்னதை கேட்டுக் கொண்டு முட்டாள் பீஸ் ஆக இருந்து தம்பிகள் இரண்டு பேரும் தற்போது திருந்தியதால் கூட இன்னொரு பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. இதற்கு பருத்தி மூட்டை பேசாம குடோனில் இருந்திருக்கலாம்.

இதற்கு அடுத்தபடியாக தர்ஷினி இருக்கும் இடத்தை கிட்டத்தட்ட ஜனனி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி குற்றவை நெருங்கி விட்டார்கள். ஆனாலும் இவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன் ஜீவானந்தம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்று தர்ஷினியை காப்பாற்றி விடுவார். ஆனாலும் இக்கட்டான சூழலில் இரண்டு பேரும் இருக்கும் பொழுது போலீஸ் அதிகாரிகள் உதவியுடன் பாதுகாக்கப்படுவார்கள்.

ஆக மொத்தத்தில் தர்ஷினி வீட்டிற்கு வந்தால் தான் அந்த வீட்டிற்கு விமோசனம் கிடைக்கும் என்பதற்கு ஏற்ப மருமகளின் ஒற்றுமை பழையபடி இருக்கும். அதே நேரத்தில் குணசேகரன், ஜான்சி ராணி மற்றும் கரிகாலனை மறுபடியும் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து தர்ஷினிக்கு திருமணத்தை பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணப் போகிறார். இது எப்படிநாளும் நடக்காது என்றாலும் இதை வைத்தே இன்னும் கொஞ்ச நாள் ஓட்டப் போகிறார்கள்.

Also read: ஓசிலையே கோடீஸ்வரி ஆகலாம்னு கனவு காணும் விஜயா.. கழுவுற தண்ணீல நழுவுற மீனாக எஸ்கேப் ஆகும் ரோகினி

- Advertisement -

Trending News