ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஏமாற போறாங்க, அதனால் ஓவர் பில்டப்.. குணசேகரின் நக்கல் நையாண்டி பேச்சு

சன் டிவியின் மிகப்பெரிய பலமே இப்பொழுது விருவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல்தான். ஒரு பக்கம் சுயமாக சாதிக்க ஆரம்பித்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் ஈஸ்வரி இருக்கிறார். இவருடைய வெற்றி தன்னுடைய வெற்றிக்கு சமம் என்று ரேணுகா மற்றும் நந்தினி அவர்கள் ஈஸ்வரி அக்கா கல்லூரியில் மோட்டிவேஷன் ஸ்பீக்கர் ஆகிவிட்டார் என்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் இந்த விஷயம் குணசேகரன் மாமாக்கு தெரிந்து விட்டால் என்ன ஆகும் என்ற பதற்றமும் அவர்களிடையே நிலவி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத ஜனனி, பயம் இருந்தால் ஆதிரையின் நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுக்கும் அளவிற்கு நாம் போயிருக்க முடியுமா என்று துணிச்சலுடன் பேசுகிறார்.

Also read: வாலை சுருட்டி கிட்டு அடங்கி போகும் குணசேகரன்.. எல்லா விதத்திலும் பால் போட நினைக்கும் அப்பத்தா

இதற்கிடையில் கதிர், ஜனனியே நக்கலாக பேசியதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் சக்தி என் பொண்டாட்டியை பார்த்து பேசுவதற்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை. அத்துடன் பொண்டாட்டியை பற்றி யாராவது தப்பாக பேசும்போது அமைதியாக இருப்பவன் ஒன்றும் ஆண்மகனே கிடையாது. என்று கதிரை தாக்கி பேசியது சக்தி இடம் இருந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிகிறது.

இப்படி ஒரு பக்கம் அண்ணன், தம்பிக்குள் அடிதடி சண்டை நடக்கும் பொழுது குணசேகரன் மட்டும் கொஞ்சம் அமைதியாக இருந்தது அமைதிக்கு பின் புயல் வீசும் என்பதை எதிர்மறையாக சொல்வது போல் இருந்தது. அதே மாதிரி குணசேகரன் ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் ஏமாறப்போகிறோம் என்று தெரியாமல் இவர்கள் கொடுக்கிற பில்டப் கொஞ்சம் பார்ப்பதற்கு ஜாலியாகத் தான் இருக்கிறது. குணசேகரன் பற்றி இவர்கள் யாருக்குமே தெரியவில்லை என்று நக்கல், நையாண்டியாக சொல்கிறார்.

Also read: 14 வருடத்திற்கு பின் மீண்டும் ஸ்விம்மிங் சூட்டில் நயன்தாரா?. ஒரு முடிவுடன் இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

இதை அவர் வாயிலிருந்து சொல்வதை கேட்கும் போது உண்மையாகவே நமக்கு கோபம் தான் வரவேண்டும். ஆனால் நமக்கு அதை பார்க்கும் போது ரசிக்கும் படியாக தான் இருந்தது. இதுதான் குணசேகரன் உடைய உண்மையான வெற்றியின் கூட சொல்லலாம் அந்த அளவிற்கு அவருடைய நடிப்பு இருக்கிறது. அப்படி என்றால் குணசேகரனிடம் இருந்து ஒரு பெரிய தரமான சம்பவம் காத்திருக்கிறது.

ஆனாலும் இவருடைய பிளான் எல்லாம் அப்பத்தா மற்றும் ஜனனிடம் எடுபடாது. எப்படி இருந்தாலும் கடைசியாக மண்ணை கவ்வப் போவது குணசேகரன் தான். அதனால் இப்போதைக்கு சந்தோஷப் படட்டும் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. அப்பத்தா, இவருக்கு எதிராக ட்விஸ்ட் வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: சுக்குநூறாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. ஓவர் அலப்பறையா இருக்கே

- Advertisement -

Trending News