ஜனனிக்கு ஜீவானந்தம் கொடுத்த க்ளூ.. தோழருக்கு சப்போர்ட்டாக நிற்கப் போகும் குணசேகரனின் காதலி

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் பழைய மாதிரி தற்போது விறுவிறுப்பாக கதை அமைந்து வருகிறது. அதாவது அப்பத்தா உயிரோடு தான் இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. அதுவும் ஜீவானந்தம் பாதுகாப்பில் தான் அப்பத்தா இருக்கிறார். எப்படி என்றால் அப்பத்தா ஏற்பாடு பண்ணின நிகழ்ச்சியில் மர்ம நபர் யாரையோ கொலை பண்ண வந்திருக்கிறார் என்ற விஷயம் கெளதம் மூலம் ஜீவானந்தத்திற்கு தெரிந்து விடுகிறது.

அதனால் அந்த மர்ம நபர் எப்படியும் அபத்தாவை கொலை பண்ணுவதற்கு குணசேகரன் ஏற்பாடு பண்ணின ஆளுதான் என்ற விஷயம் ஜீவானந்தத்திற்கு புரிந்து விட்டது. அதனால் குணசேகரன் மூலம் மறுபடியும் அப்பத்தாவிற்கு ஆபத்து வரும் என்பதினால் முன்னெச்சரிக்கையாக தோழர்களை வைத்து அப்பத்தாவை பின் தொடர்ந்து இருக்கிறார்.

அந்த சமயத்தில் தான் குணசேகரன் ஏற்பாடு பண்ணின பாம் விஷயத்தில் அப்பத்தாவை காப்பாற்றி இருக்கிறார். அதனால் அப்பத்தா நிச்சயமாக உயிரோடு இருக்கிறார். இதனை தொடர்ந்து ஜீவானந்தத்தை எப்படியாவது வெளிக்கொண்டு வரவேண்டும் என்று ஜனனி மற்றும் சக்தி போராடி வருகிறார்கள். இதில் ஜீவானந்தம், ஜனனி ஏற்பாடு பண்ணின லாயர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

Also read: மகனின் வாழ்க்கையை வஞ்சகத்தால் வீணாக்கிய பாண்டியன்.. கேள்விக்குறியாக நிற்கும் மீனாவின் காதல்?

இருந்தாலும் ஜீவானந்தத்தை நேரில் பார்த்து பேசினால் ஒரு தெளிவு கிடைக்கும் என்பதற்காக ஜனனி மற்றும் சக்தி காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் பின் ஜீவானந்தத்தை பார்த்து அப்பத்தாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு ஜீவானந்தம் அப்பத்தாவை பற்றி நீங்கள் பேச வேண்டாம். அவர் ஆசைப்பட்ட கனவுகளை நிறைவேற்றுவதில் உங்களுடைய கவனத்தை செலுத்துங்கள் என்று சொல்கிறார்.

இதன் மூலம் அப்பத்தா உயிரோடு இருக்கிறார் என்கிற ஒரு க்ளூ ஜனனிக்கு கிடைக்கிறது. அடுத்தபடியாக ஜீவானந்தத்தை வெளியே கூட்டிட்டு வந்தால் எப்படியும் பல முடிச்சுகளை அகற்றலாம் என்ற நினைப்பில் ஜனனி முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக சாருபாலாவை நேரில் சந்திக்கிறார். எதற்காக என்றால் இவர் ஒரு சிறந்த லாயராக இருப்பது போல் கதை நகருகிறது.

அதனால் இவர் ஜீவானந்தத்திற்கு சப்போர்ட்டாக வாதாடினால் நிச்சயம் அவர் வெளி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த விஷயம் குணசேகரனுக்கு தெரிந்தால் கண்டிப்பாக கதி கலங்கி போய்விடுவார். அடுத்ததாக ஈஸ்வரி கல்லூரியில் சேர்ந்து வேலைக்கு போகிறார் என்ற விஷயம் குணசேகரனுக்கு தெரிந்து விட்டது. இதைப்பற்றி கேட்கும் பொழுது தர்ஷனும் எங்கள் இஷ்டப்படி நாங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறோம். அதற்கான முடிவில் நாங்கள் அனைவருமே தயாராகி விட்டோம் என்று துணிச்சலுடன் பேசுகிறார். இனி விழுகிற ஒவ்வொரு அடியும் குணசேகரனுக்கு மரண அடியாக தான் இருக்கப்போகிறது.

Also read: மகாநதி சீரியலுக்கு என்ட்ரி கொடுத்த பாக்கியலட்சுமி மருமகள்.. அதிரடியாக விலகிய நடிகை