செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

குணசேகரனையும், கதிரையும் அடக்கி ஆளப்போகும் ஜீவானந்தத்தின் சிஷ்யன்.. மொத்த ஆணவத்திற்கும் வச்ச வேட்டு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி மற்றும் அப்பத்தாவின் தன்னம்பிக்கையான பேச்சாள் இதுவரை அடிமையாக வாழ்ந்து வந்த ஈஸ்வரி, நந்தினி மற்றும் ரேணுகா சமீப காலமாக சொந்த காலில் நின்னு முன்னேறி வந்தார்கள். அத்துடன் அடிமையாக நடத்தி வந்த புருஷன்களிடமும் துணிச்சலாக எதிர்த்து பேசி அவர்களை செல்லாக்காசாக ஆக்கினார்கள்.

ஆனால் தற்போது குணசேகரன் எல்லாத்தையும் அடக்கும் விதமாக அடாவடித்தனத்தை காட்டி வீட்டில் இருக்கும் பெண்களை பொட்டி பாம்பாக அடக்கி விட்டார். இருந்தாலும் நம்மளால் முடிந்த வரை போராட வேண்டும் என்று ஈஸ்வரி தைரியமாக குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டதோடு அங்கு இருந்த மொத்த பேரையும் அப்படியே சைலன்ட் ஆக்கிவிட்டார்.

Also read: குணசேகரன் சேர்த்து வைத்த மொத்த பெயரையும் டேமேஜ் செய்த எதிர்நீச்சல் டீம்.. இதுக்கு பேசாம எண்டு கார்டு போட்டிருக்கலாம்

இதனை அடுத்து இனி எல்லா விஷயத்திலும் எனக்கு பதிலாக என் தம்பிகள் தான் முழுமூச்சாக இறங்கி வேலை பார்ப்பார்கள். அதே மாதிரி இந்த வீட்டில் இருக்கும் பெண்கள் இங்கே வெறும் சமையல்காரியாக மட்டும் இருந்தால் போதும். அதை விட்டுட்டு சாதிக்கப் போறேன்னு சொல்லிட்டு தேவையில்லாத பண்ணீங்கன்னா இருக்க இடம் தெரியாமல் அழித்து விடுவேன் என்று அராஜகமாக பேசினார்.

அத்துடன் கதிரிடமும் இனி அண்ணி மன்னி என்றெல்லாம் பார்க்க வேண்டாம். அதே நேரம் வாய் திறந்து எதிர்த்து பேசினாலே உங்க ஸ்டைலில் இறங்கி பதிலடி கொடுங்க என்று தம்பிகளை தூண்டி விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி குணசேகரன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் கதிர் அப்படியே ஆணவத்திற்கு போய்விட்டார். அடுத்தபடியாக வழக்கம் போல் அப்பத்தா இவர்களிடம் குணசேகரன் எல்லாத்துக்கும் துணிந்து விட்டான்.

Also read: ஈஸ்வரியை பழிக்கு பழி வாங்க கதிர் பற்ற வைத்த நெருப்பு.. உனக்குப் பிறந்தவளா? வெளுத்து வாங்கும் ஆதி குணசேகரன்

இனி அதற்கேற்ற மாதிரி உங்களை மாற்றிக் கொண்டு அதில் இருந்து போராடி ஜெயிக்கனும் என்று சொல்கிறார். அதே மாதிரி கதிர், வேணுமென்றே நந்தனிடம் வம்பு இழுக்கிறார். இதற்கு பதிலடி கொடுத்த நந்தினி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டுட்டார்.  இதை தட்டி கேட்ட ஈஸ்வரியை அண்ணி என்று கூட பார்க்காமல் ரொம்பவே தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி கேவலமாக பேசிவிட்டார். உடனே  தாரா, அப்பா என்று கூட பார்க்காமல் நாக்க புடுங்குற மாதிரி கதிரை கேள்வி கேட்டு வாயை அடைக்க வைத்தார். இதனை தொடர்ந்து வழக்கம் போல் நந்தினி ரொம்பவே நொந்து துவண்டு போய் ரேணுகா மற்றும் ஈஸ்வரிடம் புலம்புகிறார்.

இனி நம்மால் எதுவும் பண்ண முடியாது எப்போதும் போல சமையல், பூஜை ரூம் என்று அடிமையாக தான் வாழனும் என்று சொல்கிறார். அதற்கு ஜனனி, அவங்க இரண்டு அடி அடிச்சிட்டா உடனே நம்ம அடங்கி போயிருவோம்னு நினைச்சதனாலதான் இந்த அளவுக்கு ஆட்டம் போடுறாங்க. ஆனாலும் நம்முடைய நோக்கம் ஜெயித்து காட்டணும் என்பதில் இருக்கணும். அதற்காக துவண்டு போகாமல் போராடனும் என்று ஜனனி வழக்கம்போல் வாய்சவடால் விட்டு வருகிறார்.

அதே நேரத்தில் ஜீவானந்தத்தின் மனைவி இறப்பிற்கு காரணம் குணசேகரன் மற்றும் கதிர் தான் என்ற உண்மை கௌதமிற்கு தெரிந்து விட்டது. அதனால் இவர்கள் இருவரையும் அடக்க வேண்டும் என்று கௌதம் இவர்களை நோக்கி படையெடுத்து வருகிறார். இதனால் இவர்களுடைய மொத்த ஆணவமும் அடங்கப் போகிறது.

Also read: மரண மாஸ் என்ட்ரி கொடுத்த ஆதி குணசேகரன்.. அடுத்த சம்பவத்துக்கு தயாரான எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News