சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பெத்த மகள விட சொத்து தான் முக்கியம்.. பணத்தாசையில் அநியாயம் பண்ணும் குணசேகரன்

Ethirneechal: சன் டிவியின் எதிர்நீச்சல் புது குணசேகரன் வருகைக்கு பிறகு வேறு கதையில் பயணிக்க தொடங்கியுள்ளது. முழுக்க முழுக்க வில்லத்தனம் மட்டுமே நிறைந்திருக்கும் எபிசோடுகள் பார்ப்பவர்களுக்கு சலிப்பையும் உண்டாக்குகிறது.

அதில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பார்க்கும்போது குணசேகரனின் ஆட்டம் அதிகமாகவே இருக்கிறது. மனைவிகளின் பேச்சை கேட்கும் தம்பிகளை ஒதுக்கி வைத்திருக்கும் அவர் சொத்தில் ஒரு பைசா கிடையாது என்று கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து ஆடிட்டரை வரவழைத்திருக்கும் குணசேகரன் தம்பிகளின் பெயரில் இருக்கும் சொத்துக்களை மாற்றி தர சொல்லுகிறார். இதனால் கடுப்பாகும் கதிர் சண்டைக்கு பாய்கிறார். பெத்த மகள் காணாமல் போயிருக்கும் போது சொத்து தான் முக்கியம் என குணசேகரன் அடிக்கும் கூத்து ஓவராக தான் இருக்கிறது.

Also read: முத்துவுடன் கூட்டணி போட்ட அண்ணன் தம்பி.. மீனா வடிக்கும் கண்ணீரில் ஆனந்தப்படும் விஜயா ரோகினி

மேலும் ஜனனி ஒரு பக்கம் தர்ஷினி விவகாரத்தை மேலிடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அதைக் கேள்விப்படும் குணசேகரன் ஈஸ்வரி, ஜீவானந்தம் பற்றி அவதூறாக பேசுகிறார். இப்படியாக வெளிவந்திருக்கும் ப்ரோமோவில் ரேணுகா ஃபுல் ஃபார்மில் குணசேகரனை வறுத்தெடுக்கிறார்.

அதேபோல் ஜீவானந்தம் போலீஸிலிருந்து தப்பித்த விஷயமும் பூதாகரமாக வெடித்துள்ளது. இப்படி எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் தர்ஷினியின் வருகைக்காகவும் அவர் சொல்லப்போகும் உண்மைகளுக்காகவும் தான் ஆடியன்ஸ் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also read: மொத்த உண்மையையும் சொல்லி கோமதியை மாட்டி விட்ட மருமகள்.. நடுராத்திரியில் எம்டன் எடுத்த முடிவு

- Advertisement -

Trending News