சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மொத்த உண்மையையும் சொல்லி கோமதியை மாட்டி விட்ட மருமகள்.. நடுராத்திரியில் எம்டன் எடுத்த முடிவு

Pandian Stores 2 Serial Today Episode: இந்த வார டிஆர்பி-யில் அடித்து நொறுக்கி கொண்டிருக்கும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்று மருமகளால் கோமதி வசமாக சிக்கிக்கொண்டார். கோமதிக்காகத்தான் கதிர், ராஜியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் எண்ணெய்யும் தண்ணீயுமாய் ஒட்டாமல் இரு துருவமாய் இருக்கின்றனர்.

அதுவும் கல்யாணமான பிறகு ராஜி இருக்கும் அறைக்கு கூட கதிர் செல்ல மறுத்து மொட்டை மாடியில் தூங்கப் போகிறார். உடனே அவருடைய அண்ணன் சரவணன் கதிரை ராஜி இருக்கும் ரூமுக்குள் அனுப்பி வைக்கிறார். இதைப் பார்த்த பாண்டியன், ‘தம்பிகள் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஜோடி ஜோடியாக தனித்தனி அறையில் இருக்கிறார்களே! என்று சரவணன் வருத்தப்படுவார். சீக்கிரமாகவே அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்’ என்று நினைக்கிறார்.

அதோடு நள்ளிரவு 2 மணிக்கு புரோக்கருக்கு கால் பண்ணி, இன்னும் ஒரே வாரத்தில் தன்னுடைய மூத்த மகன் சரவணனுக்கு ஏற்ற மாதிரி ஒரு பெண்ணை காட்ட வேண்டும் என்று ஸ்டிட்டாக சொல்கிறார். மறுநாள் காலை ராஜி, எல்லோருக்கும் டீ கொடுக்கும்போது கதிர், பாண்டியனை போலவே டீ யை எடுக்காமல் கோபமாக கிளம்பி விடுகிறார்.

Also Read: முத்துவுடன் கூட்டணி போட்ட அண்ணன் தம்பி.. மீனா வடிக்கும் கண்ணீரில் ஆனந்தப்படும் விஜயா ரோகினி

மாமியாரை மாட்டிவிட்ட மருமகள்

இதனால் குழம்பிப்போன பழனிவேல் ராஜிடம், ‘எதற்காக கதிர் உன் மீது கோபமாக இருக்கிறார்’ என்று கேட்க, உடனே கோமதி ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். இதற்கிடையில் மீனா, ‘என்னமோ அத்தை தான் கதிர்-ராஜி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தது போல், அவரிடம் எல்லாத்தையுமே கேட்கிறீர்கள்!’ என்று மொத்த உண்மையையும் போட்டுடைத்தார்.

இதைக் கேட்டதும் பழனிவேல் மட்டுமல்ல சரவணன், செந்திலும் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு வேளை அது மாதிரி தான் நடந்திருக்குமோ! கதிரை வலுக்கட்டாயமாக ராஜுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்களோ! என்று வீட்டில் இருக்கும் எல்லோருக்குமே இப்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை எப்படி கோமதியும் மீனாவும் சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: குக் வித் கோமாளிக்கு குட் பை.. சேனலை விட்டு வெளியேறிய பிரபலம், மொத்த டிஆர்பியும் போச்சே!

- Advertisement -

Trending News