புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இரண்டாம் தாரமாக தர்ஷினியை படுகுழியில் தள்ளும் கொடூர குணசேகரன்.. கமுக்கமாக வேடிக்கை பார்க்கும் சிம்மக்கல் ராணி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், இத்தனை நாளாக குணசேகரன் தான் தர்ஷினியை கடத்தி வைத்திருப்பார் என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் தற்போது வந்த ப்ரோமோ படி அது உறுதியாகிவிட்டது. அதாவது குணசேகரன் தான் அடியாட்களை வைத்து தர்ஷினியை கடத்த சொல்லி இருக்கிறார். என்னதான் ஆணாதிக்கத்தின் உச்சகட்டமாக இருந்தாலும் பொண்ணுக்கு இந்த மாதிரி ஒரு அநீதியை பண்ணும் கேவலமான ஒரு கேரக்டரில் தான் குணசேகரன் இருக்கிறார்.

அதுவும் தன் மகள் அங்கிருந்து தப்பித்துப் போய் விடக்கூடாது என்ற காரணத்திற்காக மயக்க மருந்து கொடுத்து சுயநினைவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் அளவிற்கு ஒரு கேடுகெட்ட வேலையை குணசேகரன் பார்த்து வருகிறார். பாவம் தர்ஷினி இவர்களிடம் மாட்டிகிட்டு பித்து பிடித்தது போல் பயத்தில் என்னை கடத்தியது என்னுடைய அம்மா ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தம் தான் என்று புலம்பிக் கொண்டு வருகிறார்.

இதனை அடுத்து குணசேகரன், கோபமாக ஜான்சி ராணி மற்றும் கரிகாலனை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். அதன் பிறகு இவர்கள் இத்தனை நாளாக எங்கே இருந்தார்கள் என்று பார்த்தால் குணசேகரன் கஸ்டடியில் தான் மறைந்திருக்கிறார்கள் என்று தெரியவந்து விட்டது. தற்போது குணசேகரன் பிளான் பண்ணியது என்னவென்றால் தர்ஷினி 18 வயசு முடிகிற வரை அங்கே அடைத்து வைத்துவிட்டு பிறகு நினைத்ததை சாதிக்கப் போகிறார்.

Also read: தம்பி பேச்சைக் கேட்டு முத்துவை சரமாரியாக கேள்வி கேட்கும் மீனா.. விஜயா ஆசைப்படி பிரிய போகும் ஜோடி

அதாவது கரிகாலனுக்கும், தர்ஷினிக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணப் போகிற பேச்சு வந்த பொழுது சட்டரீதியாக இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. தர்ஷினி முழுமையாக 18 வயது ஆன பிறகு மட்டுமே கல்யாணம் பண்ண முடியும் என்று ஒரு சிக்கல் இருப்பதால் குணசேகரன் இந்த மாதிரி திருட்டு வேலையை பார்த்து வருகிறார்.

அந்த வகையில் தர்ஷினியை அடைத்து வைத்து அவர் நினைக்கிற காரியங்களை சாதிக்க போகிறார். அதில் முதலாவது கரிகாலன் மற்றும் தர்ஷினி கல்யாணம். இரண்டாவதாக எலக்சன் நடக்கும் பொழுது ஈஸ்வரிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி ஜெயிலில் இருந்தால் ஈஸியாக எலெக்ஷனில் ஜெயித்து விடலாம் என்ற மட்டமான புத்தியில் இந்த வேலையை பார்த்திருக்கிறார்.

ஆனாலும் இவருடைய பிளானை தவிடு பொடியாக்கும் வகையில் ஜீவானந்தம் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி குற்றவை தர்ஷினியை கண்டுபிடித்து விடுவார்கள். அதன் பிறகு தான் குணசேகரனை ஒவ்வொருவரும் வச்சு செய்யப் போகிறார்கள். இது தெரியாமல் ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் குதூகலத்தில் இருந்து வருகிறார்கள். கடைசியில் இவர்கள் எல்லாத்துக்கும் சேர்ந்து ஒரு ஆப்பு காத்துக் கொண்டிருக்கிறது.

Also read: திருடிய பணத்தை முத்துவிடம் திருப்பி கொடுக்கும் மீனாவின் தம்பி.. யாருன்னு தெரியாமலே ஓவராக குதிக்கும் விஜயா

- Advertisement -

Trending News