சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

குணசேகரனின் மைண்ட் வாய்ஸ்.. பிள்ளை பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் யாரு கண்டா

கதையை ரொம்ப ஜவ்வு மாதிரி இழுக்காமல் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் கொண்டு செல்வது எதிர்நீச்சல் சீரியல் மட்டும்தான். ஆதிரையின் திருமணத்தில் பெரிய மாஸ்டர் பிளான் போட்டுக் கொண்டிருக்கும் குணசேகரன் கொஞ்ச நாட்களாகவே ரொம்பவும் அமைதியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு பின்னணியில் பக்காவாக ஜான்சி ராணியை வைத்து காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் இவருடைய நடிப்பெல்லாம் அப்பத்தா மற்றும் ஜனனி கிட்ட எடுபடாது. இவரைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்த அப்பத்தா நிச்சயதார்த்தத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார். அதற்காக அனைவரும் டிரஸ் வாங்குவதற்கு குடும்பத்துடன் கடைக்கு வந்திருக்கிறார்கள். அங்கே எஸ்.கே.ஆர் என் தம்பியான அரசு மற்றும் அருண் வந்திருக்கிறார்கள்.

Also read: குணசேகரனை நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட நந்தினி.. பதிலடி கொடுத்த ஜனனி

பின்பு ஆதிரை என்னுடைய நிச்சயதார்த்த புடவை ஜனனி அன்னி தான் செலக்ட் பண்ண வேண்டும் என்று கூறுகிறார். உடனே குணசேகரன் மற்ற மருமகளிடம் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா எஸ் கே ஆர் குடும்பத்தில் ஜனனியை தத்தெடுத்து விட்டார்கள் என்று சொல்கிறார். அதற்கு உடனே எஸ் கே ஆர் தம்பி, அவங்களுக்கு எங்க வீட்டு குணம் இருக்குது தத்து எடுத்தா கூட தப்பு இல்லை என்று மூஞ்சில பல்லாருன்னு அடிச்ச மாதிரி சொன்னாரு பாரு அங்க தான் நிக்கிறாரு.

அப்பொழுது குணசேகரனின் மைண்ட் வாய்ஸ் எப்படி இருந்தது என்றால் பிள்ளை பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் என்று யார் கண்டா அப்படிங்கற மாதிரி இருந்தது. ஆனாலும் எஸ் கே ஆர் இன் குடும்பத்தோடு ஜனனிக்கு ஏதோ ஒரு பந்தம் இருப்பது போலவே தெரிகிறது. அதாவது ஜனனியோட அப்பா எஸ்கேஆர் இன் அண்ணனாக இருப்பது போல் கதையை கொண்டு வரலாம்.

Also read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல்கள்.. விஜய் டிவியை ஓரம் கட்டி வரும் ஜீ தமிழ்

ஏனென்றால் ஜனனியின் அப்பா காதல் திருமணம் செய்ததால் தான் குடும்பத்தில் இருந்து விலக்கி விட்டதாக கூறியிருக்கிறார். அப்படி பார்க்கும் பொழுது இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கலாம். அதனால் என்னமோ தான் இப்பொழுது எஸ்கேஆர் இன் தம்பி சொல்வது மிகவும் ஒற்றுப்போவது போல் தெரிகிறது.

அடுத்ததாக குணசேகரின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் இருவரும் சேர்ந்து அவரைத் திட்டி வாட்டி வதக்கி எடுத்துக்கிட்டு இருக்கிறார். பின்பு ஈஸ்வரி, ஜனனி கிட்ட போன் பண்ணி கிளம்பி வரவா என்று கேட்கிறார். அதற்கு ஜனனி பயந்து ஓடி வந்துட்டா நாலு சுவத்துக்குள்ள முட்டிட்டுதான் நிக்கணும். என்ன செய்யணும் என்று நீங்களே முடிவு பண்ணுங்க என்று சொல்லும்போது ஜனனியின் தெளிவான பேச்சு, ஈஸ்வரியை ஊக்கப்படுத்தி காலேஜில் ஸ்பீச் கொடுப்பதற்கு மிகவும் உறுதுணையாக அமையும்.

Also read: இரண்டு குடும்பமாக பிரியப் போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கோபத்தின் உச்சகட்டத்தில் ஜீவா

- Advertisement -

Trending News