பெத்த மகளை கடத்தி அராஜகம் செய்யும் குணசேகரன்.. வாடிவாசலை தாண்டியதால் ஜெயிலுக்கு போன 4 பெண்கள்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஆணாதிக்கத்தின் உச்சத்தில் இருந்த குணசேகரன் தற்போது பெத்த மகளைக் கடத்திக்கொண்டு அராஜகம் பண்ணும் அளவிற்கு போய்விட்டார். அதாவது தர்ஷினியை கடத்தி வைத்து அந்த பழியை ஜீவானந்தம் மீது போட்டுவிட்டால் அப்பத்தா இறப்பிற்கு யார் காரணமானவர்கள் என்பதை மறைத்துவிடலாம் என்று நினைத்து பிளான் பண்ணினார்.

அதற்கேற்ற மாதிரி தர்ஷினையே தேடி ஜீவானந்தம் போகும் பொழுது, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து அவரை விசாரணைக்கு அழைத்துப் போய்விட்டார். அத்துடன் தர்ஷினியை தேடி போன நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் ஜனனி அனைவரும் ஒரு லெட்டர் கிடைத்ததை வைத்து போலீஸ் மூலமாக உதவி கேட்டு மேற்கொண்டு தேடலாம் என்று அனைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விட்டார்கள்.

ஆனால் போலீஸ் குணசேகரனின் ஆளாக இருப்பதால் அவர் சொன்னபடி ஜீவானந்தத்துடன் சேர்த்து அந்த நான்கு பெண்களையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி விட்டார். இதனைத் தொடர்ந்து குணசேகரன் ஏற்பாடு பண்ணின லாயர் மூலம் அனைத்து பிரச்சனைக்கும் காரணமானவர்கள் இவர்கள் தான் என்பதற்கு ஏற்ற மாதிரி கேசை திசை திருப்பி விட்டார்கள்.

Also read: முத்துவின் பேச்சால் சூனியக்காரி ஆக மாறப்போகும் ஸ்ருதி.. இந்த விஷயத்துல எஸ்கேப் ஆன மீனா

இது என்னடா வம்பா போச்சு என்பதற்கு ஏற்ப தர்ஷினியை கண்டுபிடிப்பதை விட்டுட்டு தேவை இல்லாமல் ஆணியை புடுங்குற மாதிரி இருக்கிறது. அந்த வகையில் தர்ஷினியை கண்டிப்பாக குணசேகரன் தான் மறைத்து வைத்திருக்கிறார் என்பது போல் தெரிகிறது. பிறகு இந்த விஷயங்கள் அனைத்தும் சக்திக்கு தெரிய வருகிறது. மேலும் இதற்கு காரணமானவர் குணசேகரன் என்று தெரிந்ததும் சண்டைக்கு போகிறார்.

ஆனால் குணசேகரன், ஜீவானந்தத்தையும் ஈஸ்வரியும் சேர்த்து சம்பந்தப்படுத்தி கொடூரமாக நடந்து கொள்கிறார். இனியும் இவரை நம்பிகிட்டு இந்த வீட்டில் சும்மா இருந்தால் வேலைக்கு ஆகாது என்று சக்தி, கதிர் மற்றும் ஞானம் அனைவரும் மனைவிகளை பார்ப்பதற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்கள். ஒருவேளை போன இடத்தில் அவர்கள் சொல்ற விஷயங்களை வைத்து தர்ஷினையே தேடுவதற்கு கதிர் போக வாய்ப்பு இருக்கிறது.

அப்படி இல்லை என்றால் அவர்களை ஜாமினில் எடுப்பதற்கு ஞானம் முயற்சி செய்யலாம். ஆக மொத்தத்தில் கதையை விட்டு வேற டிராக்கில் இந்த மொத்த கதையும் மாறிவிட்டது. அத்துடன் வாடி வாசலை தாண்டி ஒவ்வொரு பெண்களும் சொந்த காலில் நின்னு ஜெயிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், எல்லாம் தலைகீழா மாறிவிட்டது. அதாவது வாடி வாசலை தாண்டினால் பெண்கள் ஜெயிலுக்கு போக தான் நிலைமை வரும் என்பதற்காக கேவலமாக கதை நகர்ந்து வருகிறது.

Also read: கிடைக்கிற கேப்பில் ஆட்டைய போட நினைக்கும் விஜயா.. முத்துவிடம் வசமாக சிக்க போகும் ரோகிணி