வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

குணசேகரன் லெட்டர் எல்லாம் எழுதி வச்சிட்டு போற ஆளா.. கண்ணீரில் தத்தளிக்கும் எதிர்நீச்சல் குடும்பம்

Ethirneechal Serial: கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக தினமும் பார்த்து ரசித்து காதில் ஒலித்த குரல் தான் குணசேகரனின் ஏய் இந்த அம்மா. இவருடைய நடிப்புக்காக தான் எதிர்நீச்சல் நாடகத்தையே முதலில் பார்க்க ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகுதான் கதை, வசனம் எல்லாம் பிடிக்க ஆரம்பித்தது. அப்படிப்பட்ட குணசேகரன் தற்போது இல்லாதது ஏதோ நாடகத்துக்கு உயிரே இல்லாத போல் டம்மியாக போய்க்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் குணசேகரனின் இடத்தை நிரப்ப முடியாமல் அவர் கைப்பட ஒரு லெட்டரை எழுதி வீட்டை விட்டு போன மாதிரி கதை நகர்ந்து வருகிறது. இந்த லெட்டரை பார்த்ததும் வீட்டில் இருந்த கதிர், ஞானம், கரிகாலன் மற்றும் விசாலாட்சிக்கு எந்த அளவிற்கு கண்களில் இருந்து கண்ணீர் பொங்குகிறதோ, அதே மாதிரி இந்த நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் கண்ணீர் வந்து விட்டது என்றே சொல்லலாம்.

Also read: சமீபத்தில் சின்னத்திரையில் பட்டையை கிளப்பிய 5 பிரபலங்கள்.. மறைந்தாலும் மக்கள் மனதில் வாழும் ஆதி குணசேகரன்

அந்த அளவிற்கு குணசேகரனின் இழப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தற்போது ஞானம், ஆடிட்டரிடம் எங்க அண்ணன் ஏன் இப்படி பண்ணாங்க எங்க போனாங்க என்று தெரியுமா என கேட்கிறார். உடனே அவர் ஒரு பத்திரத்தை எடுத்து கொடுக்கிறார். அதை பார்த்ததும் கதிர் ரொம்பவே உடைஞ்சு போய் அழுகிறார்.

அதே மாதிரி கரிகாலனும், யோவ் எங்க இருக்கிற நீ இல்லாம எங்களால இருக்க முடியல. உன்ன புரிஞ்சுக்காமல் இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் நீ ஒரு வில்லன். ஆனா நீ எனக்கு மிகப்பெரிய உயிர், என் காதில் உன் குரல் ஒளிச்சு கொண்டே இருக்கிறது. சீக்கிரம் திரும்பி வா என்று உண்மையிலேயே அவர் மனதார குணசேகரன் இல்லாததை நினைத்து சொல்லும் வார்த்தைகளாக தான் தெரிகிறது.

Also read: கடைசி காட்சியில் மிரட்டி விட்ட குணசேகரன்.. அடுத்தடுத்து தொழிலதிபராக மாறும் மருமகள்கள்

இவர்களை பார்க்கும் பொழுது நமக்கும் அதே உணர்வு தான் ஏற்படுகிறது. குணசேகரன் இல்லாதது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. அத்துடன் அனைவரும் வா வா என்று கூப்பிடும் போது உண்மையிலேயே வந்து விடமாட்டாரா என்று ஒரு மனம் ஏங்க துடிக்கிறது என்றால் அது குணசேகரனுக்காக தான் இருக்கிறது.

இப்படி இவர் இல்லாத காட்சியை அவரை வைத்து உண்மையிலேயே அந்த மொத்த டீமும் அவருடைய மனக் கவலையை கொட்டி தீர்த்து விடுகிறார்கள். ஆக மொத்தத்தில் இப்போதைக்கு குணசேகரன் கேரக்டருக்கு வேற யாரும் வருவதாக தெரியவில்லை. அதனால் இந்த மாதிரி கதையை வைத்து ஓட்டப் போகிறார்கள் என்பது தெரிகிறது.

Also read: இந்த வார டிஆர்பி-யில் கலக்கிய டாப் 6 சீரியல்கள்? குணசேகரனை சமாளிக்க முடியாமல் திணறும் சேனல்கள்

- Advertisement -

Trending News