வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஜான்சி ராணியும் கரிகாலனையும் கொத்தா தூக்கிய போலீஸ்.. தில்லு முல்லு செய்யும் குணசேகரன் கதிர்

நல்லா போயிட்டு இருந்த எதிர்நீச்சல் சீரியல் ஆதிரையின் திருமண கதை நம்மளை வெறுப்படைய செய்கிறது. இவர்களால் விறுவிறுப்பும் குறைந்துவிட்டது. ஒரு வழியாக நிச்சயதார்த்தம் வரை வந்த அனைவரும் இதை நல்லபடியாக முடித்துவிட்டு போவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் கதிர் மூக்கு முட்ட குடிச்சுகிட்டு அடங்கிப் போய் இருக்காரு.

இன்னொரு பக்கம் அரசு, கதிர் ஏன் இன்னும் ஆளையே காணும் தங்கையின் நிச்சயதார்த்தத்துக்கு அவர் இல்லனா எப்படி. ஒவ்வொருவரிடமும் கேட்கும்போது இப்ப வந்துருவாரு ரூம்குள்ள படுத்திருக்கிறார் என்று சொல்லி மாத்தி மாத்தி பேசிகிட்டு இருக்கீங்க. அவரை கண்டிப்பா கூட்டிட்டு வரணும் என்று சொல்கிறார். உடனே நந்தினி ரேணுகா அவரைத் தேடி போகும் போது அவர் தன்னை யார் என்றே தெரியாத அளவிற்கு போதையில் இருக்கிறார்.

Also read: எஸ் கே ஆர் பொண்டாட்டினா வாயை பிளக்கும் குணசேகரன்.. மெண்டல் என லெப்ட் அண்ட் ரைட் வசை பாடிய எக்ஸ் லவ்வர்

நந்தினி இதுதான் கிடைத்த சான்ஸ் என்று இஷ்டத்துக்கு கதிரை கண்ணா பின்னா என்று திட்டுகிறார். ஆனாலும் உணர்வே இல்லாமல் கதிர் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி வர மறுத்துவிட்டார். இதற்கிடையில் இந்த நிச்சயதார்த்தத்தை எப்படியாவது நிறுத்திவிட்டு குணசேகரனை பற்றி எல்லார் முன்னாடியும் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று ஜான்சி ராணியும் கரிகாலனும் ஒவ்வொரு மண்டபமாக தேடி வரும் பொழுது அவர்களுக்கு போலீஸ் ரூபத்தில் ஒரு ஆப்பு தயாராகிவிட்டது.

எதிர்பார்க்காத நேரத்தில் கந்துவட்டி பிரச்சனையில் ஜான்சி ராணியும் கரிகாலனையும் கொத்தாக தூக்கியது போலீஸ். ஒரு வழியாக இவங்க கிட்ட இருந்து வரும் பிரச்சனை சரியாகி விட்டது. இனிமேல் நிச்சயதார்த்தத்துக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கும் போது அரசு திடீரென்று நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு இது நடக்காது என்று அடாவடித்தனமாக பேசுகிறார்.

Also read: அண்ணியை அவமதித்த மாமனார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இணையுமா?

இதற்கு காரணம் கதிர் வந்து இந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டால் மட்டும்தான் நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடக்கும் என்று சொல்லிவிட்டார். இதை பார்த்த சாருபாலா ஏன் இப்படி பண்ற என்று கேட்டதற்கு இது நான் எடுத்த முடிவு இதில் யாரும் தலையிட வேண்டாம் என்று கூறிவிட்டார். பிறகு கதிர் வராததால் அரசு எழுந்து இதை நிறுத்திக் கொள்ளலாம் நம்ம வீட்டுக்கு போகலாம் இது சரிப்பட்டு வராது என்று மேடையில் இருந்து அருணை எழுந்திருக்க சொல்கிறார்.

பிறகு மண்டபத்தில் எல்லாரும் இஷ்டத்துக்கு பேசியே பிரச்சினை பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்து விட்டது. இதை பார்த்து அப்பத்தா, குணசேகரனிடம் பொறுமையாக இரு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று கூற, பொறு அப்பத்தா அதுக்கு தான் நான் போராடிக்கிட்டு இருக்கேன் என்று சொல்கிறார்.

இப்படி இருக்கையில் கதிர், அண்ணன் நீங்க அந்தப் பக்கம் நிச்சயதார்த்தத்திற்கு போராடுங்கள் நான் போதையில் ஆடுகிறேன் என்று இருக்கான். ஆனால் இதெல்லாம் பார்க்கும்போது குணசேகரன் திட்டத்தின் படி தான் கதிர் இப்படி நடந்து கொள்கிறானா என்று தெரிகிறது. இதற்கு பின்னாடி குணசேகரின் தில்லு முல்லு தான் காரணமாக இருக்கும்.

Also read: ரஞ்சித்தை பார்த்து காண்டாகிய கோபி.. மனதிற்குள்ளே புலம்பித் தவித்த நிலைமை

- Advertisement -

Trending News