எம்ஜிஆர் உடன் கவுண்டமணி நடித்த ஒரே படம்.. இன்று வரை மறக்காத நக்கல் மன்னன்

பொதுவாகவே சினிமா என்றாலே நமக்கு ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு வித்தியாசமான விதத்தில் ஒரு படத்தை கொடுப்பது தான்.  அந்த வகையில்  படத்தை பார்ப்பவர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சில விஷயங்கள் ஆச்சரியப்பட வைக்கும். அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் நடந்திருக்கிறது.

அப்படி வியந்து பார்த்த ஒரு படத்தின் இயக்குனர் இவரா, இந்த நடிகரா என பிரமிப்பூட்டும் விதமாக சில விஷயங்கள் இருக்கிறது. அந்த வகையில் நக்கல் மன்னன் கவுண்டமணி, எம்ஜிஆர் உடன் நடித்தது தான். எம்ஜிஆர் படம் பொதுவாகவே கருத்துள்ளதாகவும் மற்றவர்களை சிந்திக்க வைக்கிற மாதிரி தான் படம் அமையும்.

Also read: இயக்குனராக ஜெயித்து காட்டிய எம்ஜிஆர்.. வெள்ளி விழா கண்ட 3 படங்கள்

அப்படிப்பட்ட அவர் நடித்த படம் தான் உழைக்கும் கரங்கள். இத்திரைப்படம் 1976 ஆம் ஆண்டு கே.சங்கர் இயக்கத்தில் எம்ஜிஆர், லதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் இவரின் கிராமத்து மக்களுக்காக நன்மைகளை செய்து வரும் ரங்கன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் எம்ஜிஆர் க்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

மேலும் இந்த படத்தில் சற்றும் அறியாத ஒரு புகழ் பெற்ற நக்கல் மன்னன் கவுண்டமணி நடித்திருப்பார். இதில் கவுண்டமணி கார் டிரைவர் ஆக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்பொழுது இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு இவர் இந்த அளவுக்கு நகைச்சுவையின் மன்னனாக வருவார் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

கவுண்டமணி, எம்ஜிஆர் உடன் நடித்த திரைப்படத்தில் கார் டிரைவர் ஆக இருந்த புகைப்படம்

goundamani
goundamani

Also read: ஆவிகளுடன் பேசப் போராடிய எம்ஜிஆர்.. 3 வது மனைவி ஜானகியை திருமணம் செய்ய இதுதான் காரணம்

ஏனென்றால் அந்த கதாபாத்திரத்தில் அவரின் பெயர் கவுண்டமணி கிடையாதாம். வெறும் மணி என்ற பெயரோடு தான் சினிமாவிற்கு நுழைந்தார். பின்னர் செந்தில் அடிக்கும் காமெடிக்கு கவுண்டர் கொடுக்கும் விதமாக இவரது நகைச்சுவை இருக்கும். அதனாலேயே பின்னர் இவர் கவுண்டமணி என பெயர் பெற்றார்.

கவுண்டமணி சினிமா வாழ்க்கையில் அந்தக் காலத்தில் எம்ஜிஆர் முதல் 90ஸ் காலகட்ட வரை நடித்திருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிற விஷயங்களில் ஒன்று. அதனாலயே என்னமோ இன்று வரை இவரை மறக்க முடியாத நக்கல் மன்னனாக திகழ்ந்து வருகிறார்.

Also read: செந்தில் கவுண்டமணி காமெடி வசனங்களை டைட்டிலாக்கும் சந்தானம்.. தொடர் பிளாப்புக்கு பிறகும் தைரியமாக எடுத்த முடிவு

- Advertisement -spot_img

Trending News