புது மாப்பிள்ளை சோக்குக்கு திரிந்த கோபி.. கடைசியில் ஆப்பு வைத்த செழியன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது இரண்டாவது தரமாக ராதிகாவை கட்டிக்கொண்ட கோபி தினமும் படாதபாடு பட்டு வருகிறார். தனது குடும்பத்தை வெறுப்பேற்றுவதற்காக பாக்யா வீட்டுக்கு எதிரே வந்திருக்கும் கோபி பல சேட்டைகள் செய்து வருகிறார்.

இந்நிலையில் புது மாப்பிள்ளை சோக்குக்கு எங்கு சென்றாலும் ராதிகாவுடன் செல்வது, ரொமான்ஸ் செய்வது என நாளுக்கு கோபி குதூகலமாக உள்ளார். ஆனால் இப்படி இருக்கும் கோபிக்கு அவரது மூத்த மகன் செழியன் மிகப்பெரிய ஆப்பு வைத்துள்ளார்.

Also Read :விஜய் டிவியால் சாவின் விளிம்பிற்கு செல்லும் காமெடி நடிகர்கள்.. செஞ்சாலும் குத்தம் செயலானாலும் குத்தமா!

அதாவது இப்போது தான் 25 இளைஞன் போல இருக்கும் கோபி தாத்தாவாகி உள்ளார். ஜெனி தலை சுற்றல், வாந்தி இருப்பதாக கூறுகிறார். அப்போது பாக்கியா அதுவாக இருக்குமோ என ஈஸ்வரியிடம் கேட்கிறார். இதைத்தொடர்ந்து ஜெனி கர்ப்பமாக இருப்பது எல்லோருக்கும் தெரிய வருகிறது.

இதனால் செழியன் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார். அதுமட்டுமின்றி எழில் செழியனை இறுக்கி அணைத்து வாழ்த்துக்களை கூறுகிறார். பாக்யாவின் ஒட்டுமொத்த குடும்பம் சந்தோஷத்தில் உள்ளனர். இந்நிலையில் பாக்கியா காய்கறி வாங்கிக் கொண்டு வெளியில் நிற்கிறார்.

Also Read :வெண்பா கழுத்திற்கு வந்த அருவாள்.. மௌனராகம் கதை போல பாரதிகண்ணம்மாவில் நடந்த ட்விஸ்ட்

அப்போது செழியனின் தாத்தாவும் அருகில் உள்ளார். அந்தச் சமயத்தில் சிலர் இப்பதான் புது மாப்பிள்ளை பவுசுக்கு சுற்றி திரிஞ்சுக்கிட்டு இருக்காங்க. கடைசில தாத்தா ஆன வயசுல இது தேவையா. இப்போ நான் கொள்ளு தாத்தா ஆகிட்டேன் என கிண்டல் அடிக்கிறார்.

இதைக் கேட்டு கோபி ஆத்திரமடைந்த உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை என தனது அப்பாவிடம் கேட்கிறார். உண்மையதான சொன்ன செழியனுக்கு குழந்தை பிறந்தால் நீ தாத்தா தானே தாத்தா, தாத்தா என்ன கத்துகிறார். இதைக் கேட்டு கோபியும் மகிழ்ச்சியடைகிறார்.

Also Read :மாயாண்டி குடும்பத்தாரை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அண்ணன் தம்பி பாசமுன்னா இப்படித்தான் இருக்கணும்

Next Story

- Advertisement -