பாக்கியாவிடம் சிக்கி சின்னாபின்னமான கோபி.. உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருப்பதால் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. கோபி பாக்யாவின் கணவன் என தெரிந்தவுடன் தற்போது ராதிகா அவரிடமிருந்த ஒதுங்கியுள்ளார்.

ஆனால் ராதிகாவின் குடும்பத்தினர் கோபியை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகின்றனர். இதனால் ராதிகா வெளிநாடு செல்ல முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாக கோபி மீது சந்தேகம் வந்துள்ளது. அதாவது சில நாட்களாக கோபிக்கு ஆர் இன்று நம்பரிலிருந்து ஃபோன் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

அந்த ஃபோன் கால் வந்தாலே கோபியின் முகம் மாறுவதை பார்த்து பாக்கியா சந்தேகப்படுகிறார். இந்நிலையில் கோபி பாத்ரூமில் உள்ளபோது பாக்கியா கோபியின் மொபைல் ஃபோனை எடுத்து அந்த நம்பரை பார்க்க முயற்சிக்கிறார். ஆனால் அதற்குள் கோபி வந்துவிடுகிறார்.

உடனே என் ஃபோனை எடுத்த என்ன பண்ற என அதிகாரமாக பேசுகிறார். ஆனால் பாக்யா அதிரடியான கேள்விகளால் கோபியை நடத்துகிறார். அதாவது அந்த நம்பர் யாருடையது. அது ஆணா, பெண்ணா. அந்தப் ஃபோன்கால் வந்தால் உங்களது முகம் மாறுகிறது. இப்போது அது யார் என்பது எனக்கு தெரிந்தே ஆக வேண்டுமென பாக்கியா கூறுகிறார்.

எப்போதும் போல கோபி உன் கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை என பாக்கியாவை திட்டித் தீர்க்கிறார். ஆனால் பாக்யாவுக்கு சந்தேகம் அதிகமாகிறது. மேலும் அந்த நம்பரை எங்கேயோ பார்த்தது போல அவருக்கு உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஒருவேளை இது ராதிகா தான் என தெரிந்தால் குடும்பம் சின்னாபின்னமாக அதிக வாய்ப்புள்ளது.

கண்டிப்பாக கோபி ராதிகாவின் பக்கம்தான் நிற்பார். மேலும் பாக்கியா ராதிகாவுக்காக கோபியை விட்டுக்கொடுக்கவும் வாய்ப்புள்ளது. கண்டிப்பாக அதை ராதிகா ஏற்க மறுத்துவிடுவார். இவ்வாறு பல அதிரடி திருப்பங்களுடன் உச்ச கட்ட பரபரப்பில் பாக்யலட்சுமி தொடர் வரக் காத்திருக்கிறது.

Next Story

- Advertisement -