ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ராதிகா இருந்தும் நிம்மதி இல்லாமல் தவிக்கும் கோபி.. பாக்யாவை தொடர்ந்து எழிலுக்கு உதவி செய்யும் செழியன்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா குடும்பத்தில் இருப்பார்கள் தாத்தாவின் நினைப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில் செல்வி மற்றும் இனியா இருவரும் சேர்ந்து ஈஸ்வரியை சிரிக்க வைத்து அவருடைய மனநிலை மாற்ற முயற்சி செய்கிறார்கள்.

அடுத்ததாக இனியாவை காலேஜில் விட்டுட்டு வரும் பொறுப்பை மறுபடியும் ஈஸ்வரி ஏற்று இனியாவை காலேஜுக்கு கூட்டிட்டு போக தயாராகி விட்டார். அப்பொழுது ஆட்டோக்கு காத்துக் கொண்டிருந்த ஈஸ்வரி மற்றும் இனியாவை பார்த்த கோபி நான் ட்ராப் பண்ணுகிறேன் என்று கூப்பிடுகிறார்.

ஆனால் எதையும் காது கொடுத்து கேட்க ஈஸ்வரி அங்கு வந்த ஆட்டோவில் இனியாவை ஏற சொல்லி காலேஜுக்கு கூட்டிட்டு போய் விடுகிறார். ஆனாலும் விடாமல் கோபி, அம்மாவை பாலோ பண்ணி காலேஜுக்கு போகிறார்.

சந்தோஷத்திற்காக தெருத்தெருவாக அலையும் கோபி

பிறகு காலேஜுக்கு போனதும் ஈஸ்வரி, இனியாவை உள்ளே போக சொல்லிட்டு ஆட்டோவில் ஏறுகிறார். ஆனால் கோபி, நீங்கள் ஏன் என்னை இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கள். நான் தெரிஞ்சே உங்களை காயப்படுத்த வில்லை. தப்பு தான் உங்களை நம்பாமல் ஜெயிலுக்கு அனுப்பியது என்னுடைய மிஸ்டேக் தான். ஆனால் அது நான் தெரியாமல் பண்ணின ஒரு விஷயம்.

அதுக்கு நீங்கள் தற்போது தெரிஞ்சே எனக்கு மிகப்பெரிய தண்டனை கொடுத்து வருகிறீர்கள். இதனால் கொஞ்சம் கூட நிம்மதி இல்லாமல் நான் தவிக்கிறேன். யார் என்னை வேண்டாம் என்று ஒதுக்கினாலும், நீங்கள் என் பக்கம் தான் இருப்பீர்கள். என்னை கைவிட மாட்டீர்கள் என்று நினைத்தேன். ஆனால் தற்போது மற்றவர்களை விட நீங்கள் தான் என்னை ரொம்பவே காயப்படுத்தி வருகிறீர்கள் அம்மா என்று கெஞ்சுகிறார்.

இதையெல்லாம் கேட்டும் மனம் இறங்காமல் கோபியிடம் பேசாமல் ஈஸ்வரி போய்விடுகிறார். ராதிகாவை கல்யாணம் பண்ணினால் நிம்மதியாக இருக்கலாம் என்று கோபி நினைத்தார். ஆனால் தற்போது ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷத்தை தேடி அழியும்படி கோபியின் நிலமை மோசமாக போய்விட்டது. இதுதான் இருக்கிறத வச்சிட்டு சந்தோஷமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.

அடுத்தபடியாக எழில் புதுசாக பால் காய்ச்சின வீட்டில் அமிர்தா உடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கே வந்த செழியன் வீட்டுக்கு தேவையான சாப்பாடுகளை வாங்கிட்டு வந்து அனைவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று ஒற்றுமையாக சாப்பிட்டுக் கொள்கிறார்கள். அப்பொழுது அந்த வீட்டுக்கு பரிசாக கொடுப்பதற்காக டிவியும் வாங்கிட்டு வந்து கொடுக்கிறார்.

இவரைத் தொடர்ந்து கோபியும், நிலா பாப்பாவுக்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வந்து தாத்தா என்கிற முறையில் நான் என் பேத்திக்கு பணம் கொடுக்கிறேன். இதை யாராலும் தடுக்க முடியாது என்று நிலாவின் கையில் பணத்தை கொடுக்கிறார். இதை வேண்டாம் என்று மறுக்கும் எழிலை அமிர்தா தடுத்து விடுகிறார்.

தனியாக வந்து சொந்த காலில் நின்னு முன்னேற வேண்டும் என்று ஆசைப்படும் எழிலுக்கு பாக்கியா உதவி செய்ததை தொடர்ந்து ஒவ்வொருவராக உதவி செய்து வருகிறார்கள். இப்படியே போனால் எப்பொழுது அவருடைய இலட்சியத்தில் வெற்றி பெற்று மறுபடியும் பாக்கியா வீட்டோட சென்று சந்தோஷமாக இருப்பார் என்பது தெரியவில்லை. இருந்தபோதிலும் இவர்களுடைய பாசத்தை யாராலும் பிரிக்க முடியாது என்பதை பார்க்கும் பொழுது சந்தோசமாகவும் இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -

Trending News